கமலஹாசனை காலை வாரிவிட்டு 5 தோல்வி படங்கள்.. தடமே தெரியாமல் தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிய மும்பை எக்ஸ்பிரஸ்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது வரை இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தனது உடலையே வருத்திக் கொண்டு நடித்து வரும் கமல்ஹாசன் பல தோல்வி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதில் முக்கியமாக 5 திரைப்படங்கள் அவரின் திரைவாழ்க்கையையே மூட்டை கட்டும் அளவிற்கு அவருக்கு தோல்வியை கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்

ராஜபார்வை : 1981ஆம் ஆண்டு இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ராஜபார்வை திரைப்படம் கமல்ஹாசனின் நூறாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கதை எழுதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரித்த கமலஹாசனுக்கு, இப்படம் பெரும் தோல்வியை கொடுத்தது. இந்த படத்தின் தோல்வியால் நஷ்டமடைந்த கமல்ஹாசன், கிட்டத்தட்ட 5 வருடங்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடி வைத்தார்.

Also Read : அமர்களம் படத்தில் கமல்ஹாசன்.. இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்!

குருதிப்புனல்: 1995 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கிய குருதிப்புனல் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இத்திரைப்படம் போலீஸ் மற்றும் நக்சலைட்டுகளுக்குள்ளான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், ஹிந்தியில் வெளியான துரோக்கள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளியான நிலையில், கமல்ஹாசனுக்கு இத்திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

ஹே ராம் : 2000 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து, இயக்கி, கதை எழுதி, நடித்த ஹேராம் திரைப்படத்தில் ஷாரூக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் நடித்திருப்பர். ஹிந்து, முஸ்லிம் மதங்களில் ஏற்பட்ட கலவரத்தின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கமல்ஹாசனின் இந்த முயற்சி விமர்சன ரீதியாக மாபெரும் தோல்வியை கொடுத்தது.

Also Read : ரெண்டு படம் ஹிட்டானா கமல்ஹாசன் நடவடிக்கையே மாறும்.. எழுதி வச்சுக்கங்க என்ற பிரபலம்

மும்பை எக்ஸ்பிரஸ் : 2005 ஆம் ஆண்டு தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நாசர், கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கிய இத்திரைப்படத்தில், கமல்ஹாசன் தயாரித்து, கதை எழுதி, நடித்திருப்பார். இதனிடையே அந்த ஆண்டு விஜய்யின் சச்சின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டானதையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வந்த தடமே இல்லாமல் சென்றது எனலாம்.

உத்தம வில்லன் : 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், பாலசந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்த திரைப்படமாக இருந்தது. இப்படத்தின் கதையும், கமலஹாசனின் நடிப்பும் பேசப்பட்டாலும், படத்தை பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை என்பதே பலரும் விமர்சனமாக இருந்தது. இதுவே இயக்குனர் பாலச்சந்தர் நடித்த கடைசி திரைப்படமாகும்.

Also Read : பயில்வானை கேவலமாக திட்டிய கமல்ஹாசன்.. அதுக்குன்னு இந்த வார்த்தை சொல்லக்கூடாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்