நாங்களும் நடிப்போம் என களமிறங்கிய 5 இயக்குனர்கள்.. முருங்கைக்காயை வைத்தே ஃபேமஸான பாக்கியராஜ்

80களில் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக கொடி கட்டி பறந்த 5 இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய படங்களின் மூலமாகவே நடிகர்களாகவும் அவதாரம் எடுத்துள்ளனர். அதிலும் முருங்கைக்காய் மூலம் இயக்குனர் பாக்கியராஜ் பட்டித்தொட்டி எங்கும் பேமஸானார்.

பாக்கியராஜ்: 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் உதவியாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரு சிறிய காட்சியில் தோன்றி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பாக்கியராஜ் இயக்குனராக தனது முதல் படமான “சுவர் இல்லாத சித்திரங்கள்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்ற படங்களை இயக்கி தனக்கான ஒரு இயக்குனர் அந்தஸ்தை திரைத்துறையில் பதித்தார். அதனைத் தொடர்ந்து “முந்தானை முடிச்சு” படத்தை பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். தமிழ்நாட்டில் இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் ஊர்வசி அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். அதிலும் இவன் நடித்த படங்களில் முருங்கைக்காய் சமாச்சாரத்தை பற்றி பேசி பிரபலமானார். இவ்வாறாக சிறந்த இயக்குனர்களாக இருந்து தங்களுக்கும் நடிப்பு வரும் என்பதை பாக்யராஜ் அவர்கள் நிரூபித்துள்ளார்.

Also Read: காணாமல் போன 2 நடிகர்கள்.. பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹீரோக்கள்

டி ராஜேந்தர்: பன்முகங்களைக் கொண்ட இவர் இயக்குனர், நடிகர், பாடகர், இசைக்கலைஞர் என திரைத்துறையில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அதிலும் டி ராஜேந்திரன் அவர்கள் பேசும் வசனங்களானது சமூக கருத்துகளை கொண்டதாகவும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய வகையிலும் இருக்கும். இவர் இயக்கத்தில் ஒரு தலை ராகம், ரயில் பயணங்கள், கிளிஞ்சல்கள், மைதிலி என்னை காதலி போன்ற படங்களில் இயக்குனராகவும் கௌரவ தோற்றத்திலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

அதிலும் “தங்கயோர் கீதம்” என்ற படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை திரைத்துறையில் பதித்திருப்பார். இப்படத்தில் சூல கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.இதற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதினையும் கூட டி ராஜேந்திரன் அவர்கள் பெற்றுள்ளார்.

பாண்டியராஜன்: 1985 ஆம் ஆண்டு வெளியான கன்னி ராசி படத்தின் மூலம் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து தற்பொழுது நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடத்திலும் இன்றளவும் திரைத்துறையில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் ஆண்பாவம், கோபாலா கோபாலா, மனைவி ரெடி போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்து வெற்றி நடை போட்டது.

1985 ஆம் ஆண்டு வெளியான “ஆண்பாவம்” என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோபாலா கோபாலா என்ற படத்தில் குஷ்பு உடன் லிப்டில் இவர் அடிக்கும் லூட்டியும் ஒரு மார்டன் கிச்சன் அமைத்து குஷ்புவுக்கு இவர் செய்து தரும் சமையல் காட்சியும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read: 90ளில் இயக்குனராகவும், நடிகராகவும் கொண்டாடப்பட்ட 5 நட்சத்திரங்கள்.. இரண்டிலும் முத்திரை பதித்த மணிவண்ணன்

பார்த்திபன்: இயக்குனர் கே பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அவதாரம் எடுத்தார். இப்படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் சுகமான சுமைகள், ஹவுஸ் ஃபுல், பச்சை குதிரை, விந்தகன், நானும் ரவுடிதான், ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராக ஆவதற்கு அழகு மட்டும் முக்கியமில்லை என்பதை தனது நடிப்பின் மூலம் பார்த்திபன் அவர்கள் நிரூபித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான நீ வருவாய் என, வெற்றிக்கொடி கட்டு, உன்னை கூட என்னை தருவேன், அழகி, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க போன்ற படங்களில் நடித்து இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகனாக நிலைத்து நிற்கிறார். அதிலும் குண்டக்க மண்டக்க என்னும் படத்தில் வடிவேலுடன் இவர் அடிக்கும் லூட்டி இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவில் இன்றளவும் டிரண்டாகி வருகிறது.

மணிவண்ணன்: இவர் தமிழில் 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய சில வெற்றி பெற்றிருந்தாலும்.இவர் மக்களிடையே நடிப்பு திறனுக்காகவே மிகவும் பிரபலமானார். இவர் திரைத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதிலும் சத்தியராஜ் உடன் அமைதிப்படை என்ற படத்தில் அரசியல்வாதி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். சிறந்த கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து திரைத்துறையில் தனித்துவமானவராக கருதப்பட்டார். இவர் நடிப்பில் வெளியான “வாழ்க்கைச் சக்கரம்” எனும் படம் ஒரு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் மணிவண்ணன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: 90ளில் இயக்குனராகவும், நடிகராகவும் கொண்டாடப்பட்ட 5 நட்சத்திரங்கள்.. இரண்டிலும் முத்திரை பதித்த மணிவண்ணன்

இவ்வாறு இந்த 5 இயக்குனர்களும் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் தங்களது நடிப்பு திறமையால் மட்டுமே இன்றளவும் திரைத்துறையில் இயக்குனர்களாக இல்லாமல் நடிகர்களாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர். அதிலும் பாக்கியராஜ் அறிமுகப்படுத்திய முருங்கக்காய் சாம்பல் செம பேமஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்