இந்தாண்டு திருமணத்திற்கு தயாரான 5 ஜோடிகள்.. விரைவில் டும் டும் டும்

பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப் பிரபலங்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்க உள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் பல பிரபலங்கள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தனர். தற்போது அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில் ஐந்து ஜோடிகள் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் : கோலிவுட்டில் சில வருடங்களாக நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நயன்தாரா தன்னுடைய கேரியரில் மிகவும் பிஸியாக இருந்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். இந்நிலையில் இந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்கயுள்ளது.

பிரியா பவானி சங்கர், ராஜ்வேல் : பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பே பல வருடங்களாக ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆனதாக வதந்திகள் வெளியானது. சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராஜ்வேல் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் இவர்களது திருமணம் இந்த ஆண்டு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வினய், விமலாராமன் : நடிகர் வினய் சில வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் வெளிநாடு சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு கூடிய விரைவில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முகேன் ராவ், யாஸ்மின் நதியா : பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ் பாடகர் மற்றும் நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகை யாஸ்மின் நதியா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது.

விஜயபிரபாகரன், கீர்த்தனா : கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனுக்கு கீர்த்தனா என்ற பெண்ணுடன் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

- Advertisement -