அரச்ச மாவையே அரச்ச கதையில் 5 நகைச்சுவை படங்கள்.. ஆர்யா, ஜீவாக்கு செட்டானது, கொஞ்சம் கூட செட்டாகாத விஷால்

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதைக்களத்துடன் திரைப்படங்கள் வந்தாலும் நகைச்சுவை படங்களுக்கென தனி மவுசு உண்டு. அதிலும் காதல் கலந்த நகைச்சுவை படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுப்பர். இருந்தாலும் ஒரு படத்தின் கதை ஹிட்டாகி விட்டால், அதே பாணியில் தொடர்ச்சியாக படங்கள் வந்து அரைச்ச மாவையே அரைச்ச 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் : 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவையை கொண்டு உருவானது. வேலையில்லா இளைஞர் தனது காதலுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சொந்தமாக தொழில் ஆரம்பித்து காதலிலும், தொழிலும் ஜெயிக்கிறாரா, இல்லையா என்பது தான் இப்படத்தின் கதை. சந்தானம், ஆர்யாவின் காமெடி இன்றளவு இப்படத்தை பார்ப்போருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும்.

Also Read: அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.. 17 வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா சாயிஷா

சிவா மனசுல சக்தி: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இப்படம் செம ஹிட்டானது. ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். தனிப்பட்ட கோபத்தால், தங்களது காதலை எப்படியெல்லாம் மறைத்துக்கொண்டு நாயகனும், நாயகியும் இருக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. சந்தானம், ஜீவாவின் மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் காமெடி இன்றளவும் மீம்ஸ்களில் உலா வருகிறது.

வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்யா, தமன்னா, பானு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் காதலா, நட்பா என்ற கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும். ஆர்யா, சந்தானம் காமெடி இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் படம் ரசிக்கும் படி அமைந்தது.

Also Read: பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

ஒரு கல் ஒரு கண்ணாடி: தமிழக அமைச்சரும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனருமான நடிகர் உதயநிதி ஸ்டாலினின் முதல் படமான இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கினார். ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் சந்தானம். 2012 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அந்தாண்டின் சிறந்த படமாக வெளியானது.

தீராத விளையாட்டு பிள்ளை: இயக்குனர் திரு இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருப்பார். யுவனின் இசையில் வெளியான இப்படத்தில் பிளே பாயாக உலா வரும் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருப்பார். ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்து வரும் விஷால், கடைசியில் தனது தவறை உணர்ந்து, காதல் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்கிறாரா, இல்லையா என்பது தான் இப்படத்தின் கதை. அதிக வசனங்கள் விஷால் பேசியும் படத்தில் ரசிக்கும்படியாக விஷாலின் நடிப்பு அமையவில்லை என்பது தான் உண்மை.

Also Read: அடி மேல அடி மேல அடிவாங்கும் விஷால்.. நம்பிய நண்பர்களால் வந்த பெரும் சோதனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்