புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பல வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட 5 திரை நட்சத்திரங்கள்.. நீதிமன்றத்திலேயே கதறி அழுத நளினி

Actress Nalini: திருமணமான ஒன்று இரண்டு வருடங்களில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்குவது என்பது சினிமா நட்சத்திரங்கள் இடையே வழக்கமான ஒன்று. . திருமணமான ஒரே வருஷத்தில் கும்பிடு போட்டு விட்டு வந்த நடிகைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் பல வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு, தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நட்சத்திர ஜோடிகள் கூட விவாகரத்து வாங்குவது தான் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஐந்து ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.

பல வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட 5 திரை நட்சத்திரங்கள்

நளினி -ராமராஜன்: எண்பதுகளின் காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நளினி. நடிகர் ராமராஜனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 1988 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

2000 ஆம் ஆண்டு தங்களது 13 வருட வாழ்க்கையை முடிவு செய்து கொண்டு வந்தனர் இந்த தம்பதியினர். விவாகரத்து வாங்கிய அந்த நாளில் நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண்டே நளினி மீடியாவுக்கு பேட்டி கொடுத்தது இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும்.

பார்த்திபன்-சீதா: நடிகை சீதா நம்பர் ஒன் கதாநாயகியாக இருக்கும் பொழுது புதிய பாதை படத்தின் மூலம் பார்த்திபன் இயக்குனராக அறிமுகமானார். இருவருக்கும் இந்த படப்பிடிப்பு சமயத்தில் காதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தங்களுடைய 11 வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: 2005 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஜோடி தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பொழுது ரஜினியின் மகளை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இறக்கும் நிலையில் தங்களுடைய 20 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் இந்த ஜோடி.

ஜிவி பிரகாஷ்-சைந்தவி: பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து தங்களுக்கான துறைகளில் வெற்றியைப் பெற்ற திருமணம் செய்தவர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி. கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள்.

ஜெயம் ரவி-ஆர்த்தி : ஊரே கண் படும் அளவுக்கு பயங்கர கெமிஸ்ட்ரியோடு வாழ்ந்த தம்பதிகள் தான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. வீட்டில் அடம் பிடித்து தற்கொலை முயற்சி வரை செய்து 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை கரம் பிடித்தார் ஜெயம் ரவி. இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 15 வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறார் நடிகர் ஜெயம்ரவி.

- Advertisement -

Trending News