உடம்பில் உள்ள குறைகளை மறந்து சினிமாவில் சாதித்த 5 நட்சத்திரங்கள்.. விக்ரமிற்கு இப்படி ஒரு நிலமையா?

உடலில் சிறு குறைகள் இருந்தாலும் அவர்களை கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஏனென்றால் நோயற்ற உடலை கொடுத்த நம்மாலே சில விஷயங்களை சாதிக்க முடியாமல் உள்ள நிலையில், உடம்பில் சில குறைகளுடன் உடைய நபர்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவ்வாறு சினிமாவில் மாற்றுத்திறனாளி என்பதை மறந்து சாதித்த 5 பிரபலங்களை பார்க்கலாம்.

ராணா டகுபதி : பாகுபலி படத்தில் பல்வால்தேவனாக ரசிகர்களை மிரட்டி இருந்தவர் ராணா டகுபதி. இவர் தேசிய விருது, நந்தி விருது, சைமா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். ராணா டகுபதிக்கு ஒரு கண் பார்வைக் கோளாறு உள்ளதாம். அதற்காக ராணா பல மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்ட போதும் தற்போது வரை அது சரியாகவில்லையாம்.

தரணி : தில், தூள், கில்லி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் தரணி. இவர் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அதிரடி திரைப் படங்களை கொடுத்துள்ளார். இவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாம். தரணி பிறக்கும் போதே அவரது காலில் பிரச்சினை இருந்துள்ளது. அதை தற்போது வரை சரி செய்ய முடியவில்லை.

அபிஷேக் பச்சன் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் அபிஷேக் பச்சன். இவரை பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாதது போல் தான் தெரியும். ஆனால் இவருக்கு பிறவியிலிருந்தே மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக நடந்துகொள்ளும் ஒரு நோயாம். அதன் பிறகு பல மருத்துவர்களையும் கையாண்டு தற்போது இந்த நோயிலிருந்து அபிஷேக்பச்சன் விடுபட்டுள்ளார்.

அபிநயா : சசிகுமாரின் நாடோடிகள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் நடிகை அபிநயா. இவர் ஈசன் படத்திலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்நிலையில் அபிநயாவுக்கு சரியாக பேச வராதாம். அதுமட்டுமல்லாமல் காது கேட்கும் திறன் குறைபாடு உள்ளதாம்.

விக்ரம் : வித்தியாசமான மற்றும் கடுமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டவர் நடிகர் விக்ரம். தற்போது விக்ரமுக்கு 55 வயதாகியும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் காலில் காயம்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளார். இதனால் இப்போது வரைக்கும் அவருக்கு காலில் பிரச்சனை உள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ரன்னிங் காட்சிகளில் விக்ரம் மிகவும் சிரமப்பட்டு நடிப்பாராம்.

Next Story

- Advertisement -