2021 சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்த 5 ஹீரோக்கள்.. உச்சகட்ட பயத்தை கிளப்பிய ரஜினி

jai bhim
jai bhim

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2021 ஆம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே அமைந்தது. சென்ற ஆண்டு கொரோனா தோற்றால் முடக்கப்பட்டு இருந்த சினிமா துறை தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. சினிமா நட்சத்திரங்களும் தங்கள் படங்களின் வேலையில் பிஸியாக உள்ளார்கள். இந்த ஆண்டு தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற கோலிவுட் நட்சத்திரங்களை பார்க்கலாம்.

விஜய்: விஜய்க்கு இந்த ஆண்டு மாஸ்டர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை சாதனை படைத்தது. ஆனாலும், விஜய் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரியதற்காக விமர்சனங்களைப் பெற்றார். மேலும், விஜய்க்கு எதிராக நீதிபதி கடுமையான அறிக்கையை வெளியிட்டார். விஜய் பின்னர் வழக்கை மீண்டும் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் விஜய் பின்னர் தனது வரியை செலுத்தினார்.

ரஜினிகாந்த்: ரஜினியின் அண்ணாத்த படம் இந்த ஆண்டு வெளியாகி விமர்சனங்களை தாண்டியும் வெற்றி பெற்றது. அண்ணாத்த ரிலீஸுக்கு சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. முதலில் சாதாரண செக் அப் என்று சொல்லப்பட்டது. பின்னர், மருத்துவமனையின் அறிவிப்பு அவரது நோயை விளக்கியது, மேலும் ரஜினி சில நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.

கமலஹாசன்: கமலஹாசன் விக்ரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன், தனது ஆடை பிராண்டை அறிமுகப்படுத்த அமெரிக்கா சென்றார். மீண்டும் அவர் இந்தியா திரும்பிய பிறகு கமலுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கமல் தனியார் மருத்துவமனையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு தொற்றுநோயிலிருந்து குணமடைந்தார்.

சூர்யா: சூர்யா நடித்து, தயாரித்திருந்த படம் ஜெய் பீம். இப்படம் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஜெய் பீம் படம் ஒரு சமூகத்தை மட்டும் தவறாக சித்தரிக்க பட்டதாக சர்ச்சைக்கு உள்ளானது. இப்படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டாலும் சிலர் படத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவுக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை எழுப்பி வருகின்றனர்.

அஜித்: அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் கேட்டு வந்தனர். அதன் பிறகு ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளை அணுகத் தொடங்கினர். அப்போது வலிமை அப்டேட் சரியான நேரத்தில் வரும் என்று தயாரிப்பாளர் உறுதியளித்தார்.

Advertisement Amazon Prime Banner