மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 மலையாள படங்கள்.. நொடிக்கு நொடி திகில் கொடுக்கும் புருஷ பிரேதம்

5 Best Malayalam Movies: நல்ல சினிமாவுக்கு மொழி ஒரு தடையே கிடையாது. முன்பெல்லாம் பிறமொழி படங்கள் பார்ப்பவர்கள் மெத்த மேதாவிகள் போல் தெரிவார்கள். ஆனால் இப்போது பலதரப்பட்ட மக்களும் நல்ல சினிமாவாக இருந்தால் போதும் மொழி தேவை இல்லை என தேடி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மலையாள படங்கள் மீது எப்போதுமே தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். அப்படி மலையாள சினிமாவை தேடி தேடி பார்ப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஐந்து படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

அந்தாக்சரி: பிரபல மலையாள இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் அந்தாக்சரி. அந்தாக்சரி விளையாட்டில் நாட்டம் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தன்னுடன் அந்தாக்சரி விளையாடும் படி சொல்கிறார். ஹீரோ அதை மறுக்கும்போது அவருடைய மகள் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். இது தொடர்ந்து அந்த மர்ம நபர் யார் என கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

புருஷ பிரேதம்: திகில் படத்தை வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே பார்க்க வேண்டும் என்றால் அதற்கு புருஷ பிரேதம் படம் தான் கரெக்ட். ஒரு கிராமத்தில் இருக்கும் நான்கு போலீஸ்காரர்கள் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் போலீஸ் ஸ்டேஷன். அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடைக்கவும் விசாரித்து ஓய்ந்து அதை அடக்கம் பண்ணி விடுகிறார்கள். அதன் பின்னர் அந்தப் பிணத்தை தேடி மனைவி என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் வந்து அந்த போலீஸ்காரர்களை ஓட விடுவது தான் இந்த படத்தின் கதை.

பூதகாலம்: நடிகை ரேவதி முக்கியமான கேரக்டரில் நடித்த படம் தான் பூதகாலம். தன் வீட்டில் இருக்கும் பாட்டியின் மறைவிற்குப் பிறகு அம்மா மற்றும் மகன் ஒரு விதமான அமானுஷ்யத்தை தங்கள் வீட்டில் உணர்வது, அதன் பின்னர் நகரும் கதைக்களம் தான் இந்த படத்தில் கதை.

திங்களச்ச நிச்சயம் : திங்களச்ச நிச்சயம் ஒரு சுவாரசியமான திரைக்கதை. விஜயன் என்பவர் தன்னுடைய இரண்டாவது மகளின் நிச்சயதார்த்தத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என நினைக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டது தான். விஜயனின் இரண்டாவது மகளுக்கு சொல்லப்படாத காதலும் இருக்கும். உறவினர்கள் கூடும் பொழுது தேவையில்லாத பேச்சுக்கள் இருந்து சலசலப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் விஜயனின் மகன் காதலிக்கும் பெண் தன்னுடைய வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள். இதை அவர் எப்படி சமாளிக்கிறார், நிச்சயதார்த்தம் நடந்ததா என்பதுதான் படத்தில் கதை.

சுருளி: சுருளி என்னும் கிராமத்தில் பெருமாடன் என்று அழைக்கப்படும் மர்ம உருவம் சுற்றி வருகிறது. காட்டுக்குள் வருபவர்களை திசை மாற்றி விடுவது தான் இதன் வேலை. தப்பித்த குற்றவாளியே தேடி வரும் போலிஸ் இரண்டு பேர் காட்டுக்குள் நிறைந்த பிறகு நடக்கும் சம்பவம்தான் இந்த படத்தின் கதை .

Next Story

- Advertisement -