Connect with us
Cinemapettai

Cinemapettai

trance-movie

Entertainment | பொழுதுபோக்கு

ரசிகர்களை கிரங்கடித்த நஸ்ரியாவின் 5 சிறந்த படங்கள்.. கணவருடன் சேர்ந்து அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸ்

எக்ஸ்பிரஸ் குயின் நஸ்ரியாவின் சிறந்த 5 படங்கள்.

தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயின் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நஸ்ரியா நசீம் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் மலையாள நடிகர் ஆன பகத் பாசிலுடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.

நேரம்: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புதரன் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்டர் நடித்துள்ளனர். நிவின் பாலி மற்றும் நஸ்ரியாவின் காதல் காட்சிகள் ஆனது ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும். இப்படம் நிவின்பாலிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.

ராஜா ராணி: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் வெளியான ஒரு காதல் திரைப்படமாகும்.இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படமானது காதலை மையமாகக் கொண்டும் காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, ஒவ்வொரு காதலுக்கு பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது என்பதை மிக அழகாக எடுத்துக்கூறும் விதத்தில் அமைந்துள்ளது. இதில் ஆர்யாவுடன் நஸ்ரியா நசீம் மிக அருமையாக தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருப்பார்.ராஜா ராணி படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

Also Read: நஸ்ரியாவை உப்பு மூட்டை தூக்கிய கணவரின் வீடியோ.. 7வது வருட திருமண நாளுக்கு குவியும் பாராட்டு.!

நய்யாண்டி: 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் எஸ் கதிரேசனின் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் தனுஷ், நஸ்ரியா நசீம், சூரி, சத்தியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் சின்ன வண்டு என்ற கதாபாத்திரத்திலும் நஸ்ரியா நசீம் வனரோசா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

பெங்களூர் டேஸ்: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் அஞ்சலி இயக்கத்தில் அன்வர் ரஷீத் தயாரிப்பில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும்.இதில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின்பாலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், நித்தியா மேனன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பாலி இவர்களின் நட்பானது மிக அருமையாக இருக்கும். பகத் பாசில் காதலியின் இறப்பிற்குப் பிறகு எவ்வாறு தனது வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வருகிறார் என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

Also Read: நஸ்ரியாவிற்கு கிடைத்த விடுதலை.. அன்பால் கட்டிப் போட்ட பிரபல நடிகர்

டிரான்ஸ்: பிரபல மலையாள இயக்குனர் அன்பர் ரஷீத் இயக்கத்தில் டிரான்ஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நசீம் நடித்துள்ளனர் . பகத் பாசிலுக்கு வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல் படித்து வேலை கிடைக்காத ஒரு இளைஞன் தன்னை அறியாமலேயே அந்த கும்பலில் இணைந்து விடுகிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும் பொழுது அவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதே இப்படத்தின் கதை கருவாக அமைந்துள்ளது. இதில் நஸ்ரியா கணவருடன் சேர்ந்து அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸ் செய்திருப்பார்.

Also Read: வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத 10 மலையாள த்ரில்லர் படங்கள்.. திடுக்கிடும் மர்மம் நிறைந்த ‘சி யூ சூன்’

இவ்வாறு நடிகை நஸ்ரியா நசீம் நடிப்பில் வெளிவந்த 5 திரைப்படங்கள் ஆகும். தமிழ் சினிமாவில் மிக குறைந்த படங்களை நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து இன்றும் எக்ஸ்பிரஸ் குயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Continue Reading
To Top