நம் தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என்று எல்லா மொழி திரைப்படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு திரையுலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். புதிய திரைப்படங்களை அனுமதி பெறாமல் இணையத்தில் வெளியிட்டு பல தயாரிப்பாளர்களை நாடு தெருவுக்கு கொண்டுவந்தவர்கள் இவர்கள்.

திரைத்துறைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் இந்த திருட்டு கும்பலை பிடிக்க தயாரிப்பாளர் சங்கம் மட்டுமன்றி அரசும் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. எனினும் இவர்கள் சிக்கவில்லை.

rockers

இந்நிலையில் நேற்று கேரளா சைபர் கிரைம் போலீசாரால் தமிழ் ராக்கார்ஸ், டிவிடி ராக்கர்ஸ் இணையத்தை சேர்ந்த ஐந்து முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் புலிமுருகன், ராம்லீலா போன்ற படங்களை வெளியிட்டதால் இவர்கள் மேல் 7 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கேரள கிரைம் ப்ரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழ நேற்று திருநெல்வேலியில்
சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 நபர்களின் விவரம்.

1. கார்த்தி வயது 24 ( விழுப்புரம் )
2. சுரேஷ் வயது 24
3. பிரபு வயது 24
4. ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி )
5. மரிய ஜான் வயது 22.

tamil rockers admin

இவர்கள் Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாகியுள்ளவர்களில் விழுப்புரத்தை சேர்ந்த கார்த்தி இந்த கும்பலில் முக்கிய நபராக செயல்பட்டு வந்தவர் என்பதை போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம் இருப்பதையும் போலீஸார் நடத்திய விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள் . கார்த்தி கணினியில் முதுகலை பட்டம் பெற்றவராம். மற்ற நால்வரும் இன்ஜினியரிங் முடித்தவர்கள். ஜான் , ஜான்சன் இருவரும் சகோதரர்கள். இவர்கள் தான் டிவிடி ராகார்செய் நடுத்துபவர்கள்.

Tamil-rockers

எவ்வாறு பிடிபட்டனர்.

இதற்கு முன் 2016 இல் ஆண்டி பைரசி வழக்கில் கைதான அகில் என்பவருக்கு விளம்பர ஏஜெண்சி அனுப்பிய மின்னஞ்சல் வாயிலாக இவர்களை பிடித்துள்ளது கேரளா போலீஸ். அந்த மின்னஞ்சலில் நாங்கள் தமிழ் ராக்கர்ஸுடன் பல வருடமாக்க பிசினஸ் செய்கிரோம் என்று அவர்கள் குறிப்பிட்டதே துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது இந்த கைது சம்பவத்திற்கு.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.