இளவரசி கதாபாத்திரத்தில் கலக்கிய 5 நடிகைகள்.. இன்று வரை மறக்க முடியாத தேவசேனா

சமீப காலமாக சினிமாவில் வரலாற்று திரைப்படங்களின் வரவு அதிகமாக இருக்கிறது. எத்தனையோ மாஸ் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இது போன்ற வரலாற்று கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள். அந்த வகையில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஐந்து நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் காஷ்மோரா படத்தில் நடித்திருந்த அந்த இளவரசி கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

2016ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் நயன்தாரா ரத்ன மகாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ராணிக்கு உரிய கம்பீரமான நடிப்பில் அவர் மிரட்டி இருப்பார். அதிலும் அவர் கார்த்திக்கு முன்பு கால் மேல் கால் போட்டபடி திமிருடன் பேசும் அந்த காட்சி தியேட்டரில் கைதட்டலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read:யுவன்-தனுஷ் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. குத்தாட்டம் போட வைத்த ரவுடி பேபி

அனுஷ்கா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா என்னும் இளவரசியாக நடித்திருந்த இவருடைய நடிப்பு இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் ஒரு காட்சியில் பிரபாஸின் தோள் மீது ஏறி அவர் நடந்து செல்வார். அந்தப் படத்திலேயே அதிகம் ரசிக்கப்பட்ட காட்சி அது தான். அந்த வகையில் அனுஷ்காவின் உயரமும், கம்பீரமான நடிப்பும் அந்த கதாபாத்திரத்தில் அவரை கச்சிதமாக காட்டியது.

திரிஷா சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்னும் இளவரசி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். சோழர் குல பெண்களுக்கே உரிய வகையில் இருந்த இவருடைய தோற்றமும், நடிப்பும் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா இன்னும் அதே இளமையுடன் இருந்து வருகிறார். இதுவே அந்த இளவரசி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read:பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் வெற்றி நடிகையாக வலம் வரும் இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்னும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ உடையில் அழகாக இருக்கும் இவர் தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் 2018 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்தி சுரேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சீமராஜா. அதில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் ராஜாவாக இருக்கும் சிவகார்த்திகேயன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் அவருக்கு அந்த ராணி வேடம் நன்றாக பொருந்தி இருந்தது.

Also read:பாகுபலியோடு முடிந்த கேரியர்.. மனசு சரியில்லாமல் துபாயில் அவரின் அணைப்பில் இருக்கும் அனுஷ்கா

Next Story

- Advertisement -