ரஜினியை விட குறைந்த வயதில் அம்மாவாக நடித்த 5 நடிகைகள்.. அண்ணாத்த அப்பத்தாவாக கலக்கிய குலப்புள்ளி லீலா

பொதுவாக எப்போதுமே ஹீரோக்களின் மார்க்கெட் பல வருடங்கள் சினிமாவில் நிலைத்து நிற்கும். ஆனால் ஹீரோயின்கள் பொருத்தவரை சில குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே அவர்களால் கதாநாயகியாக நடிக்க முடியும். அதன் பின்பு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிப்பார்கள். அவ்வாறு ரஜினியை விட வயதில் குறைவாக இருந்தாலும் அவருக்கு அம்மாவாக நடித்த 5 நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

காந்திமதி : ரஜினியுடன் காந்திமதி முத்து, மூன்று முகம், 16 வயதிலேயே, வணக்கத்திற்குரிய காதலியே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் முத்து, மூன்று முகம், 16 வயதினிலே ஆகிய படங்களில் ரஜினியை விட மூத்தவராக காந்திமதி நடித்திருந்தார். ஆனால் ரஜினியை விட காந்திமதிக்கு ஒரு வயது தான் குறைவு.

Also Read : ரஜினிக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த 5 நடிகைகள்.. படையப்பா என்ன கொடுமை இதெல்லாம்

குலப்புள்ளி லீலா : ரஜினியின் அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்தவர் குலப்புள்ளி லீலா. இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த இவர் அவரை விட மூன்று வயது குறைவானவராம்.

கமலா காமேஷ் : 80களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ். இவர் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் விசுவின் படங்களில் இவர் இடம் பெறுவார். இவர் ரஜினியின் அதிசய பிறவி படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read : இப்பவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் 10 படத்தின் வசனங்கள்.. அவரே எழுதி அதிரடி காட்டிய பஞ்ச் டயலாக்

எஸ் என் பார்வதி : இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் பார்வதி வில்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவதால் அம்மா நடிகையாகவே திகழ்ந்தார். இவர் ரஜினியை விட வயதில் குறைவானவராக இருந்தாலும் அதிசய பிறவி, நான் அடிமை இல்லை படங்கள் மூத்தவராக நடித்திருந்தார்.

ரேவதி சங்கரன் : பிரபல நடிகையான ரேவதி சங்கரன் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பாட்டி வைத்தியம் என்று தொலைக்காட்சியில் மக்களுக்கு சில நாட்டு வைத்தியம் சொல்லி வருகிறார். ரஜினியை விட வயதில் குறைந்த இவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டாரின் அம்மாவாக நடித்திருந்தார்.

Also Read : வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்

Next Story

- Advertisement -