ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

அந்தரங்க காட்சியில் கூட நடிக்க ரெடி.. வாய்ப்பு மட்டும் தாருங்கள் என கதறும் 5 நடிகைகள்

சினிமாவில் அழகு மட்டும் இருந்தால் பத்தாது, தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக விரும்பியவாறு நடித்துக் கொடுக்கிறேன், பதிலுக்கு படவாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று வாய்விட்டு சொல்லி 5 நடிகைகள் தமிழ் சினிமாவில் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

திவ்யபாரதி: மாடல் அழகியான இவர், தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.

divya bharathi
divya bharathi

அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் திவ்யா பாரதிக்கு அவருடைய சோஷியல் மீடியாவின் கவர்ச்சி புகைப்படமும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் நடிக்கும் படங்களிலும் கவர்ச்சி தூக்கலாகவே நடித்து இளசுகளை கதிகலங்க வைத்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த்: பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்ற பஞ்சாப் மாடல் அழகியான இவர், 2016 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

yashika
yashika

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இருப்பினும் சோஷியல் மீடியாவில் எக்குத்தப்பான போஸ்களில் இளசுகளை கவர்ச்சியால் கட்டிப்போட்டிருக்கிறார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைப்பதற்காக எப்படிப்பட்ட கேரக்டர்களிலும் நடிக்கவும் தயாராக இருக்கிறார்.

ஐஸ்வர்யா மேனன்: தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், நடிகர் சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ் படம் 2’ என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

அதைத்தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா  ஆதியுடன் இணைந்து ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இருப்பினும் பட வாய்ப்புகள் குறைவதால் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.

பூனம் பஜ்வா: 37 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்பவும் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு கவர்ச்சியான கட்டுடலை வைத்திருக்கும் நடிகை பூனம் பஜ்வா, 2008ஆம் ஆண்டு பரத்துடன் சேவல் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் வரிசையாக கதாநாயகியாக நடித்து ஹிட் கொடுத்தார்.

poonam-bajwa-cinemapettai-01
poonam-bajwa-cinemapettai-01

பிறகு மார்க்கெட்டை இழந்த பூனம் பஜ்வா அரண்மனை2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், கவர்ச்சி தூக்கலாக கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்.

அனகா: பிரபல மாடலான இவர் மலையாளத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த டிக்கிலோனா படத்திலும் கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாக பேசப்படாவிட்டாலும், அந்தப் படங்களில் எல்லாம் நடிக்க ஒத்துக் கொண்டு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் சினிமா வாய்ப்பிற்காக கதை மற்றும் கவர்ச்சியை எல்லாம் பொருட்படுத்தாமல் விரும்பியபடி நடித்துக் கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுகின்றனர். இருப்பினும் கவர்ச்சி நடிகைகளாக ரசிகர்களுக்கு தெரிகிற இவர்களால் முன்னணி நடிகைகளாக மட்டும் மாற முடியவில்லை.

- Advertisement -spot_img

Trending News