Connect with us
Cinemapettai

Cinemapettai

trisha-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எங்க ரேஞ்சே தெரியாம பேசாதீங்க.. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வேண்டும் என அடம் பிடிக்கும் 5 நடிகைகள்

சில நடிகைகள் தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதுதான் பெருமை என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படங்களை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நயன்தாரா: தொடக்கத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அதன்பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என இது போன்ற படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை நயன்தாரா, அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். இதைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக தன்னுடைய 75-வது படத்தை இயக்குனர் ஷங்கர் உதவியாளர் நிகேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னேறிய நடிகையான இவர் தொடக்கத்தில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி, அதன் பிறகு வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு எந்த தயக்கமும் காட்டாமல் சிறப்பாக நடித்து அதன் மூலமே தன்னுடைய மார்க்கெட்டை பிடித்தார். பிறகு ஹீரோயின் கதாபாத்திரம் அழுத்தமாகப் பேசப்படும் படங்களை மட்டுமே ஆர்வம் காட்டிக் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பிரியா பவனி சங்கர்: சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

பின்பு இவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும், படத்தில் ஹீரோயின் கேரக்டர் சிறப்பாக இருக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என தன்னை தேடி வரும் படங்களை எல்லாம் புறக்கணித்து கொண்டிருக்கிறார்.

வாணி போஜன்: சின்னத்திரை நடிகையாக சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் குட்டி நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பிரியா பவானி சங்கர் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இவருடைய முதல் படம் லாக்கப். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இன்னும் இவர் நடித்த ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கிறது. இருந்தாலும் அடுத்தடுத்து வாணி போஜன், கதாநாயகிகளின் கதாபாத்திரம் அழுத்தமாக பேசும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

திரிஷா: 39 வயதானாலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் திரிஷா, ஜோடி படத்தில் துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை துவங்கி அதன் பிறகு முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித், விக்ரம் போன்ற நடிகர்களுடன் இணைந்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

தொடக்கத்தில் கமர்ஷியல் படங்களை நடித்தாலும் தற்போது திரிஷா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இன்னிலையில் திரிஷா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவ்வாறு மார்க்கெட்டில் டாப் ரேஞ்சில் இருக்கிறோம் என்ற தெனாவெட்டில்,  இந்த 5 நடிகைகளும் தாங்கள் நடிக்கும் படங்களில் கதாநாயகியின் கதாபாத்திரம் வலுவாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கின்றனர். இந்த எண்ணம் நயன்தாரா, திரிஷா தோன்றுவதற்கு வெற்றியை அளித்தாலும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றோருக்கு தோல்வியையே தருகிறது.

Continue Reading
To Top