2022 ஆம் ஆண்டில் வில்லனாக மிரட்டிய 5 ஹீரோக்கள்.. கேஜிஎஃப் வில்லனுக்கே டஃப் கொடுத்த ரோலக்ஸ்

2022 ஆம் ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான டாப் 5 சிறந்த வில்லன்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா மற்ற வில்லன்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்து இருக்கிறார்.

சுனில்: தெலுங்கு துறையுலகில் காமெடியனாக நடிக்க தொடங்கிய இவர், அதன்பிறகு ராஜமவுலி இயக்கிய ‘மரியாத ராமண்ணா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். பின் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சுனில், அதன்பின் இந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். இதன்பின் இவருக்கு வில்லனாக நடிப்பதற்காக பல வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆகையால் 2022 ஆம் ஆண்டு சிறந்த வில்லன்களின் லிஸ்டில் சுனில் 5-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

sunil-pushpa
sunil-pushpa

Also Read: 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

பிரகாஷ் ராஜ்: 90களில் இருந்து இப்போது வரை திரை உலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பிரகாஷ்ராஜ் தமிழில் மட்டுமல்ல மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விருமன், அண்ணாத்த போன்ற படங்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிகாட்டி 2022 ஆம் ஆண்டு சிறந்த வில்லனுக்கான லிஸ்டில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

விஜய் சேதுபதி: சினிமாவில் ஹீரோவாக நடிப்பது தான் கெத்து என சிலர் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என அதில் கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் தன்னை முரட்டு வில்லனாக காண்பித்து திரையரங்கையே மிரள வைத்திருப்பார். இந்த படத்திற்குப் பிறகு இவர் கதாநாயகனாக கமிட்டாகும் படங்களை விட, வில்லனாக கமிட்டாகும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. ஆகையால் இந்த ஆண்டிற்கான சிறந்த வில்லன்களின் லிஸ்டில் விஜய் சேதுபதி 3-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

சஞ்சய் தத்: பாலிவுட் பிரபலமான இவர் 80-களில் இருந்தே திரை உலகின் முக்கிய நட்சத்திரமாக மிளிர்கிறார். இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள படங்களில், வில்லனாக இவர் நடித்திருக்கும் படங்கள் அனைத்தும் அவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் 2022 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக மிரட்டியதால் இந்த ஆண்டிற்கான டாப் 5 வில்லன்களின் லிஸ்டில் சஞ்சய் தத் 2-ம் இடத்தில் உள்ளார்.

kgf-sanjadutt

சூர்யா: இவர் ஹீரோவாக ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்த நிலையில், தனது வித்தியாசமான நடிப்பை வெளி காட்ட வேண்டும் என விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதல் முதலாக வில்லனாக நடித்திருக்கிறார்.

இவர் இரண்டே நிமிடம் மட்டுமே படத்தில் தோன்றினாலும் படம் பார்த்தோரை மிரளவிடம் அளவுக்கு தன்னுடைய உச்சகட்ட, வெளித்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யாவை மீண்டும் ரோலக்ஸ் ஆக பார்க்க வேண்டும் என ரசிகர்களும் விரும்புகின்றனர். எனவே முதல் முயற்சியில் வெற்றி கண்ட சூர்யாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த வில்லன்களின் லிஸ்டில் முதலிடம் கிடைத்திருக்கிறது.

Also Read: படபிடிப்பில் தொடர்ந்து நடந்த அவமானம்.. நானே முதலாளி என பழிக்கு பழி தீர்த்த சூர்யா

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் 20202 ஆம் ஆண்டிற்கான டாப் 5 வில்லன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் முதல் முதலாக சூர்யா வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பழம்பெரும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்துக்கே டஃப் கொடுத்திருப்பது கோலிவுட்டை பெருமை அடைய செய்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்