10 பைசா செலவு பண்ணாம கஞ்சனாகவே நடித்த 5 பிரபலங்கள்.. சுயம்புலிங்கமாக வெற்றிகண்ட கமலஹாசன்

ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்த பல ஹீரோக்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் கஞ்சனாக நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு காரணமின்றி காலணா கூட செலவு செய்யாத கருமியாக நடித்திருந்தனர். அவ்வாறு மக்களைத் சிக்கனமாக செலவு செய்ய சொல்லிக் கொடுத்தா அந்த 5 கதாபாத்திரங்களை தற்போது பார்க்கலாம்.

சுருளி ராஜன் : காமெடி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கியவர் சுருளிராஜன். இவரது குரல் வளம் வித்யாசமாக இருக்கும்.சுதாகர், தீபா நடிப்பில் வெளியான மாந்தோப்புக்கிளியே படத்தில் சுருளிராஜன் கஞ்சன் காசிநாதன் கதாபாத்திரத்தில் சிக்கன பேரொளியாக நடித்திருந்தார்.

Read Also : தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்

பிரபு : வெள்ளந்தியான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபு ஒரு படத்தில் சிக்கனமான மனிதராக நடித்திருந்தார். டிபி கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான பட்ஜெட் பத்மநாபன் என்ற படத்தில் தன்னுடைய சொந்த வீட்டை மீட்பதற்காக சிக்கனமான வாழ்க்கையை வாழ்வார்.

பிரபுதேவா : இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் பிரபுதேவா. கே சுபாஷ் இயக்கத்தில் வெளியான ஏழையின் சிரிப்பில் என்ற படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, ரோஜா, சுபலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனியார் பேருந்தின் கண்டக்டராக கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவா கஞ்சனாக நடித்திருந்தார்.

Read Also :கதை சூப்பரா இருந்தும் ஓடாத 10 படங்கள்

கவுண்டமணி : கவுண்டமணி பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் படத்தில் நான் பட்ட கஷ்டத்தை மகன்கள் படக் கூடாது என்பதால் சிக்கனம் என்ற பெயரில் கொஞ்சம் எல்லை மீறுகிறார். அதன் பின்பு கவுண்டமணியின் மருமகள்கள் அவருக்கு உண்மையை புரிய வைக்கிறார்கள்.

கமலஹாசன் : பல அவதாரங்களில் கலக்கிய கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படம் தான் பாபநாசம். இப்படத்தில் சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனாவசிய செலவு பண்ண கூடாது என்பதில் மிகுந்த கட்டுக்கோப்பாக உள்ளவராக இப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

Read Also :உலகநாயகன் இடத்தை பிடிக்க போட்டி போடும் 5 நடிகர்கள்.. விஜய் டிவி குறிவைக்கும் பிரபலங்கள்

Next Story

- Advertisement -