புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

எல்லா கதாபாத்திரத்திற்கும் அடித்து நொறுக்கும் 5 நடிகர்கள்.. அதிலும் நம்ம கட்டப்பாவ அடிச்சுக்க ஆளே இல்ல

தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடி நடிகர்கள், வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியாக நடிகர்கள் உள்ளனர். ஆனால் சிலர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் பட்டையைக் கிளப்புவார்கள். அவ்வாறு எல்லா கதாபாத்திரத்திலும் அடித்து நொறுக்கும் 5 நடிகர்களை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி : ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் சேதுபதி தன்னுடைய கடின உழைப்பால் ஹீரோவாக கால்பதித்தார். இதைத்தொடர்ந்து வில்லனாகவும் பல படங்களில் மிரட்டி வருகிறார். தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

ஃபகத் பாசில் : மலையாள ரசிகர்களை கவர்ந்த கதாநாயகனாக வலம் வந்தவர் ஃபகத் பாசில். இதை தொடர்ந்து இவர் தமிழில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தற்போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எம்எஸ் பாஸ்கர் : நாடகப் பின்னணியில் இருந்த வந்த எம் எஸ் பாஸ்கர் திரைப்படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக செய்யக்கூடியவர். தற்போது வயது முதிர்ந்த காலத்திலும் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார். வெள்ளித்திரையில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் : ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ்ராஜ் அதன் பின்பு வில்லன் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பியுள்ளார். மேலும் ஒரு தந்தையாக அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் அசத்தியுள்ளார். அவ்வாறு கதாநாயகன், துணை கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் பிரகாஷ்ராஜ்.

சத்யராஜ் : ஹீரோவை காட்டிலும் வில்லனாக அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றவர் சத்யராஜ். மேலும் குணச்சித்திர கதாபாத்திரம், துணை கதாபாத்திரம், காமெடி, ஆக்சன் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தபவர். மேலும் பாகுபலி படத்தில் அவருடைய கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -spot_img

Trending News