பேரும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத 5 நடிகர்கள்.. அஜித்தை கொண்டாட இதுவும் ஒரு காரணம்

5 actors who get along naturally without showing bond: பெயரும் புகழும் வாங்குவதற்காகவே தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் நம் நடிகர்கள் இருந்த போதும் வெற்றியின் போதை தலைக்கேறாமல் கண்ணியத்துடன் நடப்பது சில நடிகர்கள் மட்டுமே அவ்வாறு தான் நடிகனாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான் என பந்தா காட்டாத ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர்  துப்பறியும் கதைகளை கொண்ட பல வெற்றி படங்களில் நடிகராகவும் பின்னாளில் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களுடன், முரட்டுக்காளை அருணாச்சலம் போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த காலத்தில் இருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன் மட்டுமே. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என தனி பெரும் ஆளுமைகளுக்கு இடையே காதல்படங்கள் மூலம் ரசிகர்களை வசியப் படுத்தியவர் ஜெமினி கணேசன். தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கனம் அல்லாது 90ஸ் காலகட்டம் வரை வெள்ளி திரை, சின்னத்திரை என இளம் நடிகர்களுடன் நடித்து பெயர் வாங்கிப் போனார் ஜெமினி. 

Also read: கை நிறைய காசு இருந்தும் அம்மா முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போன நாகேஷ்.. பித்து பிடிக்க வைத்த இறப்பு

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவையாளர் நாகேஷ் ஆவார். உலக நாயகன் கமல் நாகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை மட்டுமே தனது ஆபிசில் உள்ள பர்சனல் அறையில் வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நாகேஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தனது சக நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பழகி கவுண்டர் காமெடி அடிப்பாராம். 

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைக்கு முன் அல்ல, திரைக்குப் பின்னாலும் இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சக நடிகர்கள் பயந்து ஓடும் அளவு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுவாராம் கவுண்டமணி.  இன்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் கவுண்டமணி ஆபிசுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு தலைக்கனமோ கெத்தோ இல்லாமல் இயல்பான மனிதர் போல் அனைவரிடமும் பழகுகிறார் கவுண்டமணி.


பழகும் அனைவரிடமும் இனிமையானவர் என்று பெயரெடுத்தவர் அஜித். இன்றைய ஊடகங்கள் இவரை பற்றி பல்வேறு புரளி பேசினாலும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அசராமல் அமைதி காத்து வருபவர் அஜித். விடாமுயற்சி சூட்டிங் என்பது வெளிநாட்டில் அஜித்தின் ரசிகர்கள் அவரை காண படையெடுத்து வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோவாக விளங்கும் அஜித் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு  கஷ்டத்தில் உள்ள பலருக்கும் கை கொடுத்து உதவுவதில் வல்லவராம்.

Also read: ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்தின் 3 மெகா ஹிட் படங்கள்.. பில்லாவை பின்னுக்குத் தள்ளிய கேங்ஸ்டர் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்