பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட 5 நடிகர்கள்.. சிவக்குமாரை மிஞ்சிய அஜித்

திரைத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிலர் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால் அது அப்போது உள்ள சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கி 5 நடிகர்களை பார்க்கலாம்.

சிவகுமார் : சிவகுமார் 2018 ஆம் ஆண்டு செல்பி எடுக்க வந்த நபரின் போனை கீழே தட்டிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. அதன்பிறகு சிவக்குமார் நானும் மனிதன் தானே, தன்னுடைய அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பது நியாயமா என கேட்டிருந்தார். இந்த விஷயம் அப்போது சர்ச்சையாக வெடித்தது.

அஜித் : 2021 தேர்தலின் போது கொரோனா பரவல் அதிகமாக இருந்த சூழ்நிலையில் மாஸ்க் அணியாமல் ஒரு நபர் அஜித்திடம் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அஜித் அவரிடமிருந்து போனை பறித்துவிட்டார். அதன்பின்பு அந்த ரசிகர் இடம் மன்னிப்பு கேட்டு போனை திருப்பிக் கொடுத்தார்.

கமலஹாசன் : கமல் தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது மைக் வேலை செய்யாததால் தனது குழுவிடம் கோபமடைந்து கையில் இருந்த டார்ச் லைட்டை கீழே எறிந்தார். பொதுக் கூட்டத்திற்கு வந்த ரசிகர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சூர்யா : சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கு மொழியில் விளம்பரப்படுத்துவதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த அந்த சாலையில் கட்டுக்கடங்காத ரசிகர்களால் சூர்யா கோபம் அடைந்தார். இதனால் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்பதால் சூர்யா இவ்வாறு கோபப்பட்டார்.

பார்த்திபன் : தனது இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மைக் வேலை செய்யாததால் கோபத்தில் ரோபோ ஷங்கர் மீது பார்த்திபன் மைக்கை எறிந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஆனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் இவ்வாறு நடந்து கொண்டேன் என பார்த்திபன் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Next Story

- Advertisement -