சிம்புவை விட 10 மடங்கு ஆடிய ஐந்து நடிகர்கள்.. ஆறடி ரகுவரனுக்கு வந்த கெட்ட நேரம் 

சிம்பு இவர் மீது சொல்லாத குற்றங்களே கிடையாது. படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை. படத்திற்கு கால் சீட் கொடுத்துவிட்டு அட்வான்ஸ் தொகைகளையும் வாங்கிவிட்டு பிரச்சினை செய்கிறார் என ஒரு காலத்தில் இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். இவருக்கு திரைத்துறையிலிருந்து ரெட் கார்டு எல்லாம் போட்டார்கள். ஆனா இப்பொழுது இவரைப் பற்றி எல்லா இடத்தில் இருந்தும் நல்ல அபிப்ராயங்களே வருகிறது. சிம்புவை விட அந்த காலத்தில் மோசமாய் ஆட்டம் போட்ட 5 பேர்.

மைக் மோகன்: ரஜினி, கமல் சினிமாவில்ஆட்சி செய்த காலத்தில் அவர்களுக்கு சரியான டப் கொடுத்தது மோகன்தான். தொடர்ந்து பல வெள்ளி விழா படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காணச் செய்தார். மோகனை  போல ஒரு கணவர் வேண்டுமென பல பெண்கள் ஏங்கினார்கள்.இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் அதனால் 80 காலகட்டங்களில் இவரது ஆட்டம் கொஞ்சம் ஓவராக இருந்தது.

 நவரச நாயகன் கார்த்திக்: சினிமாவில் உச்சம்  தொட்ட கார்த்தி அவரது மோசமான  நடத்தையால் எல்லாத்தையும் இழந்தார். எந்த  படப்பிடிப்பிற்கும் சரியான நேரத்தில் வரமாட்டார். விருப்பப்பட்டால் ஷூட்டிங் செல்வார் இல்லை என்றால் மட்டும் போட்டு விடுவார். இவரால் பல தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டனர்.

நெப்போலியன்: 90களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். இப்பொழுது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். விருப்பப்பட்டால் மட்டுமே ஷூட்டிங் வருவார் இல்லையென்றால் கேன்சல் செய்து விடுவாராம். எல்லா ஏற்பாடுகளும்  செய்திருந்தாலும் கவலையே இல்லாமல் ஒதுக்கி விடுவாராம். 

ரகுவரன்: சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இவருக்கு இருந்தது. காலப்போக்கில் இவரை வில்லனாக சினிமா ஏற்றுக் கொண்டது. அதனாலயே இவருக்கு கடைசி வரை ஒரு விரக்தி இருந்தது. இவருக்கு மனம் இருந்தால் மட்டுமே ஷூட்டிங் வருவாராம் இல்லையென்றால் குடித்துவிட்டு தூங்கி விடுவாராம். 

அரவிந்த்சாமி: இவருக்கு 120 கோடிகள் சொத்து இருக்கிறது. 90களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்தார். இவருக்கும் பெண் ரசிகைகள் ஏராளம். பிசினஸ் செய்து வந்தார் கமிட்டான படங்களுக்கு ஒழுங்காக நடிக்க வர மாட்டார். அதனாலையே பாதி படங்களில் இவரது கதாபாத்திரத்தை மாற்றி விடுவார்கள். 

Next Story

- Advertisement -