முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில், பைரேச் நகரை சேர்ந்தவர் தானிஷ்(29). கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2013ல் திருமணம் நடைபெற்றது.

ஒரு வருடத்தில் முதல் மனைவியை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்தார். பிறகு இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் அவரையும் விவாகரத்து செய்தார்.

அதிகம் படித்தவை:  இணையத்தில் வைரலாகுது பேட்ட ரஜினி - சசிகுமாரின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள்.

அதன் பின்னர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவரையும் சில மாதங்களில் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்தார். தற்போது 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தார்.

இதனையறிந்த தானிஷின் 3 மனைவிகளும், தங்களுக்கு நடந்தது போல இனி வேறு எந்த பெண்ணிற்கும் நிகழக்கூடாது என்பதால் ஒன்றிணைந்து தானிஷின் 4வது திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

அதிகம் படித்தவை:  ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

கல்யாண மன்னனாக வலம் வந்த தானிஷ் இதனால் அதிர்ச்சியடைந்தார். மேலும் தானிஷ் மீது 3 மனைவிகளும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தானிஷ் எங்களை திருமணம் முடித்து ஆபாசப் படம் எடுத்து தவறான வழிக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தானீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.