சினிமா நடிகர் நடிகைகள் பலரும் பல காதல் கதைகளில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகர் பல நடிகைகளை காதலிப்பதும், ஒரு நடிகை பல நடிகர்களை காதலிப்பதும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் 45 வயது வயது மதிக்கதக்க நடிகை ஒருவர் 20 வருடத்திற்கு முன்னாள் பிரபல நடிகர் ஏமாற்றியதால் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒத்தையில் வாழ்ந்து வருவது அதிசயத்தில் ஒன்று தான்.
அவர் வேறு யாரும் இல்லை. பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சல்மான் கான் தான். சல்மான்கான் காதல் கிசுகிசுக்களில் பலமுறை மாட்டியுள்ளார். தற்போது 55 வயதாகியும் சல்மான் கான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
ஆனால் சல்மான்கான் பல நடிகைகளை காதலித்துள்ளார். அதிலும் சோமி அலி என்பவரை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்திய சோமி அலி, சல்மான்கான் தன்னை ஏமாற்றியதை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும், ஆனால் அவரது குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சல்மான்கான் இதே மாதிரி காதல் சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இருந்தாலும் அதைக் கடந்து தற்போது பாலிவுட் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
