Connect with us
Cinemapettai

Cinemapettai

selvaragavan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஞ்சு குழந்தைக்கு ஆசைப்பட்ட 44 வயது இயக்குனர்.. ஏற்கனவே மூணு இருக்கிறது பத்தலையா என வெளுத்துவிட்ட மனைவி!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நிறைய குழந்தைகள் பெற்று கொள்ள ஆசை எனவும், ஆனால் என்னுடைய மனைவி வேண்டாம் என்று சொல்கிறார் என வருத்தப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களை வைத்து சென்சேஷனல் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக வலம் வருபவர்களை பிரபல யூடியூப் நிறுவனம் பேட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் பழம்பெரும் இயக்குனரான பாக்கியராஜ் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற வெற்றி படத்தை கொடுத்த செல்வராகவன் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி விவரமாக தெரிவித்துள்ளார்.

என்னதான் பாக்யராஜ் சினிமா விஷயம் பேசினாலும் அவரது முருங்கைக்காய் சமாச்சாரம் பற்றிக் கேட்காமல் இருப்பாரா. அப்படித்தான் இயக்குனர் செல்வராகவனிடம் சமீபத்தில் உங்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் என கேட்டுள்ளார் பாக்யராஜ்.

அதற்கு செல்வராகவன், தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது எனவும் இன்னும் ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது குறித்த தன்னுடைய மனைவியிடம் பேசினால் சண்டைக்கு வருகிறார் என ஜாலியாக கூறியுள்ளார் செல்வராகவன்.

geetanjali-selvaragavan-cinemapettai

geetanjali-selvaragavan-cinemapettai

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில், அந்தம்மா கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும் என செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top