சில வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் ஒருவர் இப்போது திரையுலகை விட்டு காணாமல் போய் உள்ளார். இத்தனைக்கும் அவர் சிறுவயதிலிருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் அதற்காக பல விருதுகளையும் தட்டி இருக்கிறார்.
அப்படி பேரும், புகழும் பெற்ற அவர் இளம் வயதிலேயே டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் வில்லனாக நடிக்கும் பாக்கியத்தையும் பெற்றார். அதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் எல்லாமே ஏறு முகமாகத் தான் இருந்தது. இப்படி ஏராளமான திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடித்திருந்த அந்த நடிகர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர்.
இவ்வாறு அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகர் ஹீரோவாகவும் தன்னை நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்று அவர் சினிமாவில் பிசியான நடிகராக மாறி இருந்தார். ஆனால் சில வருடங்களிலேயே அவருக்கான வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து போகும் அளவுக்கு பல சம்பவங்கள் நடக்க தொடங்கியது.
ஏனென்றால் நடிகர் திடீரென 42 வயது ஆன்ட்டி நடிகையின் மோகத்தில் திளைத்து இருக்கிறார். அதிலிருந்து அவரை இயல்பாக அணுக கூட இயக்குனர்களால் முடியவில்லை. கதை சொல்ல வேண்டும் என்றால் கூட அந்த பெண்மணியை தான் சந்திக்க வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது. இதனாலேயே அவருக்கான வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்தும் போயிருக்கிறது.
Also read: டாப் நடிகருக்கு ஜோடி சேரும் பாலிவுட் கவர்ச்சி புயல்.. சீரியலின் மூலம் அடித்த யோகம்
ஆனால் நடிகர் இதைப் பற்றி கூட கவனத்தில் வைக்காமல் அந்த பெண்ணுடன் நெருங்கிய உறவில் இருந்திருக்கிறார். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது நடிகர் குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருவதால் அவருக்கு காசு பணத்திற்கு என்றுமே குறைச்சல் கிடையாது. மேலும் சம்பாதிக்கும் பணத்தை அவர் அவ்வப்போது நிலையான சொத்துக்களாக வாங்கி போட்டு இருக்கிறார்.
அதன் மூலம் அவருக்கான வருமானமும் அதிகமாக வந்திருக்கிறது. இப்படிப்பட்ட காரணத்தினாலேயே அவர் சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் தன் போக்கில் இருந்திருக்கிறார். ஆனால் நடிகரின் இந்த சகவாசம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அவருக்கு இருந்த நல்ல பெயரும் டேமேஜ் ஆனது. இப்படி ஒரு ஆன்ட்டியால் தனக்குத்தானே அந்த நடிகர் சூனியம் வைத்துக் கொண்டாரே என்று பலரும் வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.
Also read: தேவையில்லாத பெண்கள் சகவாசம், டேமேஜ் ஆன ஹீரோவின் பெயர்.. வெளிப்படையாக அரங்கேறும் கூத்து