விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இப்படத்தில் 1977-ல் நடைபெறுவது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமான முறையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.