fbpx
Connect with us

Cinemapettai

40 நொடிக்கு ஒருவர் தற்கொலை.. அதிர்ச்சியளிக்கும் தகவல்.. முக்கிய இடத்தில் சென்னை

India | இந்தியா

40 நொடிக்கு ஒருவர் தற்கொலை.. அதிர்ச்சியளிக்கும் தகவல்.. முக்கிய இடத்தில் சென்னை

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதில் சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அதில் இலக்கிய போட்டி பேச்சுப்போட்டி விவாதம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்காக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய மருத்துவமனை இயக்குனர் சந்திரிகா, ‘இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன அதற்கெல்லாம் காரணம். சரியான புரிதலும், இந்த சமுதாயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கூட  ஒரு சிறிய தோல்வி கூட தாங்க முடியாத மனநிலையில் இருக்கின்றனர் என்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.

அதில் மிக முக்கியமாக சென்னை இரண்டாவது இடத்தைப் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் பிரச்சனை தீரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவரை சுற்றி குறைந்தபட்ச 135 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

 எனவே பள்ளி கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவமனை முடிவு செய்து அதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top