300 கோடி வசூல் வேட்டை ஆடிய 4 தமிழ் படங்கள்.. பத்தே நாளில் சாதித்துக் காட்டிய ஒரே நடிகர்

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் இவர்கள் படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

அவ்வாறு உலக அளவில் 300 கோடிக்கு அதிகமாக 4 தமிழ் படங்கள் வசூல் செய்துள்ளது. ஆனால் அதில் ஒரு படம் கூட விஜய் மற்றும் அஜீத் படங்கள் இடம்பெறவில்லை. அதிகமாக ரஜினியின் படங்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது அந்த நான்கு படங்களை பார்க்கலாம்.

2.o : ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2018ல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படம் 2.O. இப்படத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மொத்தம் 540 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் கிட்டத்தட்ட 750 கோடி வசூல் சாதனை செய்தது.

கபாலி : பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. இப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 165 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. மேலும் கபாலி படம் உலக அளவில் 307 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

எந்திரன் : ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இப்படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். எந்திரன் படம் 132 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் சாதனை செய்தது.

விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களில் 300 கோடி வசூலை தாண்டியுள்ளது.

Next Story

- Advertisement -