டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 19 வயது முதல் 25 வயது வரையான இளைஞர்கள் ஆவர். இதுதொடர்பாக, தீவிரவாத தடுப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, மும்பை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னுர், மும்ப்ரா, ஜலந்தர், பீகாரில் உள்ள கிழக்கு சாம்பரான் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மறைவிடத்தில் பதுங்கியிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதர 6 பேரிடம் நொய்டாவில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் அனைவரும் ஸ்லீப்பர் செல் பாணியில், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்றும், அவர்களின் பின்புலம் பற்றி விரிவாக விசாரிக்கப்படுகிறது என்றும், தீவிரவாத தடுப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.