இயக்குனராக பிஸியாகி விட்ட பிரபுதேவா கிட்டதட்ட 12 வருடங்களுக்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் தமன்னா, வில்லன் சோன் சூத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரபுதேவா தன் சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் விஜய் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார்.

தற்போது அவரும் ஹீரோவாக பிஸியாகிவிட்டதால் அவருக்கு பதிலாக நான்கு இசையமைப்பாளர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.

விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.