புஷ்பா 2 க்கு புலி மட்டும் வழிவிடல, விலகிப் போன 4 படங்கள்.. ஆள விடுங்கன்னு ஓட்டம் பிடித்த விக்னேஷ் சிவன்

4 megastars who postponed the release of their films due to the release of Pushpa 2: திரை உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் என புகழப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் இதன் அடுத்த பாகத்தை உருவாக்கியுள்ளனர்.

அல்லு அர்ஜுன், பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 வின் டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. 

வெளியான சில நாட்களில் சுமார் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்து வருகிறது.

டீசரிலேயே தெறிக்க விட்ட புஷ்பா 2 ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஆகஸ்ட் 15 புஷ்பா 2 ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தால் பல முன்னணி நடிகர்களும் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி  அமைத்து உள்ளனர்.

GOAT : வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி நடிக்கும் கோட் திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை ஒட்டி ரிலீஸ் செய்வது என திட்டம் தீட்டினர். 

ஆனால் புஷ்பா 2 தங்களது ரிலீஸ் செய்தியை முன்னரே அறிவித்ததால் தளபதியின் கோட் திரைப்படத்தை செப்டம்பர் 5 விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வது என்று  முடிவெடுத்துள்ளது படக்குழு.

எல்ஐசி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, சீமான், எஸ் ஜே சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விக்னேஷ் சிவனின் எல்ஐசி திரைப்படமானது ஏற்கனவே கதை தலைப்பு என பல்வேறு இழுபறிக்கு பின் இப்போதுதான் இறுதி வடிவம் எடுத்துள்ளது. 

முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் அவர்களுடன் போட்டி போடாது பொறுமையாக தன் படத்தை ரிலீஸ் செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அமரன் ரிலீஸ் பற்றி அதிரடி முடிவு எடுத்த கமல் 

அமரன் :  அதிரடி ஆக்சன் கதையில் ராணுவ வீரராக களமிறங்கும் சிவகார்த்திகேயனின் அமரன் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது. அல்லு அர்ஜுனனின் புஷ்பா மற்றும் விஜய்யின் கோட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால், 

இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக கமல் தில்லாக அறிவித்துள்ளார்.

கல்கி 2898 AD:  நாக் அஸ்வின் இயக்கத்தில்  கமலஹாசன் அமிதாபச்சன், பிரபாஸ், திஷா பதானி போன்ற ஜாம்பவான்கள் நடிக்கும் கல்கி 2898 AD படம்  600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.    

நட்சத்திரங்களின் படங்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ரிலீஸ் ஆவதால் பல்வேறு காலதாமதங்களுக்கு உள்ளாகி வரும் இத்திரைப்படத்தை மே மாத இறுதிக்குள் ரிலீஸ் செய்வது என பட  குழுவினர் தெரிவித்துள்ளனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்