ஓடிடி-யில் சக்க போடு போட்டு தியேட்டரில் வெளியாக உள்ள 4 படங்கள்.. மொத்த எதிர்ப்பையும் சம்பாதித்த ராஜாக்கண்ணு,செங்கனி

4 mega hit Tamil films that have been released and re-released on OTT: தமிழ் திரையுலகில் வாராவாரம் புது படங்கள் பல ரிலீசானாலும் ஒன்று இரண்டு படங்களை தவிர,

மற்றவை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதால் திரை துறையும் அதனை சார்ந்தவர்களும் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் சிக்கி தவிக்கின்றனர் என்றே கூறலாம்

இதனால் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரத்தை இப்போது ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். ஓடிடியில் ரிலீஸ் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 4 திரைப்படங்கள் தற்போது கோடை விடுமுறையை ஒட்டி தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

சூரரைப் போற்று: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சூர்யாவிற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளங்கள் உள்ள நிலையில் அங்கு சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகி சக்கபோடு போடுவதுண்டு. 

அது போன்று தமிழகத்திலும் ஓடிடியில்  ரிலீஸ் ஆன சூர்யாவின் படங்கள் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகியவற்றை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

சுதா கோங்குராவின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில்  சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று  திரைப்படம் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம்:  ஞானவேல் இயக்கத்தில் சமூக சீர்திருத்தத்தை உள்ளடக்கி ஆளும் வர்க்கத்தை உலுக்கி எடுத்த திரைப்படமே ஜெய் பீம். 2021 ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. 

ஜெய் பீம் மற்றும் சூரரைப்  போற்று இரண்டு படங்களின் ரிலீஸ் போதும் திரையரங்கத்தினரின் பலவித நெருக்கடிகளுக்கு உள்ளான சூர்யா, தனது படங்களை வெற்றிகரமாக ஓடிடியில் ரிலீஸ் செய்து அதன் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஜெய் பீம் படத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வசனங்களையும் அவரை எழுதியது என்பது வரவேற்கத்தக்கது

ஆர் ஜே பாலாஜி, நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 2020 ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.  

பக்தி படம் போல் தோன்றினாலும் வழக்கமான கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறி நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்த  இத்திரைப்படம் பல தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. 

சார்பட்டா பரம்பரை: 2021 இல் அமேசான் பிரைமில் வெளியான  சார்பட்டா பரம்பரை 1970 இல் நடைபெற்ற குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் ஆகும். 

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி துஷாரா விஜயன்,ஜான்விஜய், ஜான் கோக்கன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் எகோபித்த வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை திரையில் ரிலீஸ் செய்ய ஆயத்தமாகி உள்ளனர் படக் குழுவினர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்