2024இல் 100 கோடி வசூலித்த 4 படங்கள்.. மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு ஆதிக்கத்தை விரட்டிய தமிழ் சினிமா

பிரேமலு மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் இரு படங்களும் ஒரு மாதத்திற்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தது. எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் என வசூலை வாரிக் குவித்தது. மலையாள சினிமா தமிழை விட தரத்தில் உயர்ந்தது என ஒரு ஆதிக்கத்தை உருவாக்கியது. ஆனால் அதை எல்லாம் உடைத்து தமிழில் சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்த 5 படங்கள்

அரண்மனை 4: ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்து தமிழ்நாட்டில் 80 கோடிகளும், ஒட்டுமொத்தத்தில் 20 கோடிகளும் என 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவையும், மலையாளம் மாதிரி தலையில் வைத்து கொண்டாட செய்தார் சுந்தர் சி.

கருடன்: சூரி நடிப்பில் அட்டகாசமான வசூலை குவித்த படம் கருடன். இதுவும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடியது. இந்த படம் ஒட்டு மொத்தமாக 78 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது. ஓ டி டி வியாபாரம் என இதுவும் தயாரிப்பாளருக்கு 100 கோடி லாபம் பெற்றுக் கொடுத்துள்ளது.


மகாராஜா: 50 நாட்கள் தியேட்டரில் ஓடிய இந்த படம் ஒட்டுமொத்தமாக 107 கோடிகள் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இது 80 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. கிட்டத்தட்ட விஜய் சேதுபதிக்கு ரீஎண்ட்ரி கொடுத்தது இந்த படம் தான்.10 படங்களுக்கு மேல் தோல்வியை சந்தித்த விஜய் சேதுபதிக்கு தனியாக நடித்து ஹிட் ஆனது

ராயன்: சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி 15 நாட்களுக்கு மேல் ஓடி வருகிறது. இந்த படம் இதுவரை 120 கோடிகள் வசூலித்தது. இந்த படத்தை தயாரித்தது சன் டிவி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறது. இதனால் தனுசை வைத்து அடுத்தடுத்த படங்கள் இயக்கும் திட்டத்தில் இருக்கிறது.

அஞ்சாமை, குரங்கு பெடல்: நல்ல கதைக்களம் கொண்ட இந்த இரண்டு படங்களும் மலையாள சினிமாவிற்கு நிகரான போட்டியை கொடுத்தது . குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த வந்த சிறந்த படங்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

Next Story

- Advertisement -