ஒரே நாளில் மோதும் 4 உச்சநட்சத்திரங்கள்.. நான் சளைத்தவன் இல்லை என சூர்யா போடும் ஆட்டம்

பொதுவாக பண்டிகை நாட்களை குறிவைத்து டாப் நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. கடந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொண்டது. இரண்டு படங்களுக்குமே ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் வேட்டையாடியது.

அடுத்த வருடம் ஒரே நாளில் நான்கு நட்சத்திரங்களின் படங்கள் மோத உள்ளது. இந்த ரேஸில் நானும் சளைத்தவன் இல்லை என்று சூர்யாவும் போட்டியிடுகிறார். அதாவது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடலாம் என முடிவெடுத்து இருந்தனர்.

Also Read : ஓவர் கெடுபிடி காட்டும் கமல்.. மணிரத்தினமே இருந்தாலும் உலகநாயகன் கொடுக்கும் டார்ச்சர்

ஆனால் அந்த சமயத்தில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு படமான ராம் சரணின் படம் வெளியாகிறது. இதனால் தமிழ் புத்தாண்டான சித்திரை 1, ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியன் 2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதே தினத்தில் தான் அஜித்தின் விடாமுயற்சி படமும் வெளியாக இருக்கிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு போட்டியாக விஜய்யும் களம் காண்கிறார். ஏற்கனவே விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read : சரண்டர் ஆன வெங்கட் பிரபு.. விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

இந்நிலையில் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி போடுகிறார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு கமல், விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த போட்டியில் நானும் சளைத்தவன் இல்லை என சூர்யா தனது கங்குவா படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது. ஆகையால் இந்த வருட புத்தாண்டு சரவெடியாக இருக்கப் போகிறது.

Also Read : உண்மை கதைக்காக வெற்றிகண்ட 5 படங்கள்.. சூர்யாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம்