யாரும் இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துற? ஓடாத படத்திற்கு 100வது நாள் போஸ்டர் ஒட்ட சொன்ன 4 புத்திசாலி நடிகர்கள்

4 actors released 100th day poster of their flop movies: கரகாட்டக்காரன் படத்தில் பல பில்டப் களை கொடுத்திருந்த செந்திலை பார்த்து கவுண்டமணி அவர்கள் “ஏண்டா உனக்கு இது தேவையா?” என்று கேட்கும்போது, பாவமான பாவனையுடன் சும்மா ஒரு பப்ளிசிட்டின்னு என்று அலப்பறை பண்ணுவார் செந்தில். அதேபோல் படம் வெளிவந்து வெற்றி பெறாத நிலையிலும் பப்ளிசிட்டி என்று 100 நாள் போஸ்டர் ஒட்டி வெற்றி பெற்றது போல் கொண்டாடிய 4 முன்னணி நடிகர்களை காணலாம்,

ரஜினி:  ரஜினியின் கேரியரிலேயே 90’ஸ் க்கு பின் மிகவும் அடி வாங்கிய படங்கள் என்றால் பாபா மற்றும் லிங்கா தான். தலைவரை அழுத்தமான திரைக்கதையுடன் ஸ்டைலா கெத்தா பார்த்த ரசிகர்கள், சுவாரசியமற்று இருந்த பாபா மற்றும் லிங்காவை ஏற்க தயங்கினர்.  இருந்த போதும் அவரை புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே 100 நாள் போஸ்டர் ஒட்டி அளப்பறை செய்து இருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

அஜித்: சிவகாசி தந்த வெற்றிக்கு போட்டியாக 3 மாத காலக்கெடு வைத்து பேரரசு இயக்கிய படம் திருப்பதி.  திரைக்கதையில் தொய்வுடன் வந்த திருப்பதி அஜித்தின் ரசிகர்களை ஏமாற்றியது. அஜித்தின் கேரியரிலேயே மிகவும் நஷ்டம் அடைந்த படம் என்றால் அது விவேகமாக தான் இருக்க முடியும். இருந்தாலும் நூறு நாள் போஸ்டர் போட்டு படத்தை தூக்கி விட முயற்சி செய்தனர் படக் குழுவினர்.

Also read: சம்பளத்தை உயர்த்தி புது பார்முலா போட்ட சூப்பர் ஸ்டார்.. கெத்து குறையாமல் ரஜினி ஆடும் பேயாட்டம்

விஜய்: சென்டிமென்ட்டா மிருகங்கள் பெயர்களில் உள்ள படங்கள் விஜய்க்கு கை கொடுப்பதில்லை என்று செய்தியை மெய்பிக்கும் வண்ணம் குருவி, புலி போன்ற படங்கள் எதிர்மறையான விமர்சனத்தை கொடுத்தது. நயன்தாரா மற்றும் விஜய் காம்பினேஷனில் உருவான வில்லு திரைப்படமும் மோசமாக சொதப்பியது இருந்தாலும் விஜய்யின் ரசிகர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் வெற்றிப் படம் என கொண்டாடினர்.

கமல்: மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு போவதற்கு ஆயுத்தமாக கமல் களமிறங்கிய படம் ஆளவந்தான். அந்த காலத்தில் பெரும் பொருட்ச அளவில் அனிமேஷன் டெக்னிக்கை பயன்படுத்தி வெளிவந்த ஆளவந்தான் ரசிகர்களின் புரிதலுக்கு இடம் கொடாமல் பின்வாங்கி போனது. கொஞ்சமும் மனசாட்சி இன்றி வெளியிட்ட  இந்த படத்தின் 100 நாள் போஸ்டரை பார்த்து தயாரிப்பாளரே கண்ணீர் வடித்தார் எனலாம்.

சமீபத்தில் வெளியான ஆளவந்தானின் மறு பதிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. தோல்வி படங்களின் மூலமே தன்னை சிறந்த கலைஞனாக அடையாளப்படுத்திக் கொண்ட கமலுக்கு, “காலம் கூட ஒரு படத்திற்கான வெற்றி காரணியாகும்” என்பதை ஆள வந்தானின் ரீ ரிலீஸ் மூலம் அறிந்திருந்தனர் சினிமா ஆர்வலர்கள்.

Also read: ரஜினிக்கு போட்டியா உச்சம் தொடும் விஜய்யின் சம்பளம்.. அரசியல் என்ட்ரிக்கு முன் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்