எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறுவதில் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ்.2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எனக் கணித்தார்.

இவரை தொடர்ந்து பாபா வாங்கா என்ற மூதாட்டி மூன்றாம் உலகப்போர் 2016 முதலே தொடங்கி விடும் என கணித்துக் கூறினார்.

இவர்களைப் போலவே க்ளேர்வாயோன் ஹொரசியோ வில்லேகாஸ்  என்பவர் இவ்விரு கருத்துக்களையும் உண்மை எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

2016-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என இவர் 2015-ம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியவர் இவர்.

இதனை தொடர்ந்து தற்போது 2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்ற அதிரச்சி தகவலையும் வெளியிட்டு உலக நாடுகளை பயத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்குமாம்.

இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்டு டிரம்ப் தான் காரணமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

மே 13 முதல் அக்டோபர் 13-ம் தேதிக்குள்  6 மாதங்கள் மூன்றாம் உலகப்போரின் பேரழிவை உலகநாடுகள் சந்திக்குமாம்.

இந்த யுத்தத்தில் சிரியா அதிபர் ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார்.

மேலும், மூன்றாம் உலகப்போருக்கு பின்னர் ‘பேரழிவின் மன்னர்’ என டொனால்ட் டிரம்ப் அழைக்கப்படுவார் ஹொரசியோ என தெரிவித்து உலக நாடுகளை பயமுறுத்தியுள்ளார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவுகளை எப்படி சமாளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.