எனக்கு ஒரு டஜன் குழந்தை வேண்டும்.. பத்து வயது இளம் கணவரிடம் கோரிக்கை வைத்த மூத்த வயது நடிகை

actress-cinemapettai
actress-cinemapettai

சினிமாவில் தன்னை விட வயது குறைவான ஆட்களை திருமணம் செய்துகொள்வது நடிகைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அப்படி சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை சமீபத்தில் குழந்தை பெறுவது பற்றி ஓபன் ஆகவே பேசியுள்ளார்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் தான் பிரியங்கா சோப்ரா. 38 வயதான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்தின் போதே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. ஹாலிவுட்டுக்கு போன புதிதிலேயே இளம் வாலிபரை தன் வலையில் வீழ்த்திவிட்டார் பிரியங்கா சோப்ரா. பிரியங்காவும் ஒன்னும் ஏப்பை சாப்பை கிடையாது. இளம் வாலிபர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்த்த உடனேயே பிடித்துப் போகும் அளவுக்கு பேரழகிதான்.

priyanka-chopra-nick-jones-cinemapettai
priyanka-chopra-nick-jones-cinemapettai

திருமணமாகி இரண்டு வருடம் ஆகியும் குழந்தை பெற்று கொள்ளாமல் தொடர்ந்து தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இருவருக்கும் குழந்தை காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் செய்தியை கிளம்பிவிட்டனர்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிடம் சமீபத்தில் தொகுப்பாளர் ஒருவர் குழந்தை ஐடியா பற்றி கேட்டுள்ளார். அதற்கு பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சப்படாமல் தன்னுடைய கணவர் நிக் ஜோன்ஸிடம் தனக்கு ஒரு டஜன் குழந்தைகள் வேண்டுமென அடம்பிடிக்க போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இருவரும் இதுவரை வயதை ஒரு காரணம் காட்டி எந்த ஒரு பிரச்சனையும் செய்து கொண்டதில்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம் எனவும் சமீபத்திய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

Advertisement Amazon Prime Banner