Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

36 வயது நடிகைக்கு ரகசியமாக சிபாரிசு செய்யும் தனுஷ்.. ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பழக்க வழக்கமாம்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். அதுவும் கடந்த சில வருடங்களில் தனுஷின் மார்க்கெட் இந்தியா கடந்து உலகளவில் உயர்ந்து விட்டது. ஹாலிவுட் சினிமாவை கலக்கிய அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களின் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் மாறன், செல்வராகவன் படம், திருச்சிற்றம்பலம், தெலுங்கில் இரண்டு படங்கள் என செம பிசியான நடிகராக உள்ளார் தனுஷ். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாறன் படம் தான் வெளியாக உள்ளது.

தனுஷ் இப்போது பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் அவருடன் ஜோடி போட பல நடிகைகள் யோசித்தனர் என்பது பலரும் அறிந்த செய்தியே. அப்படி தனுஷுடன் நடிக்க மறுத்த நடிகைகளுக்கு மத்தியில் அவருடைய முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைதான் ஷெரின்.

சமீபத்தில்கூட விஜய் டிவி ஒளிபரப்பிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நிகழ்ச்சிக்கு வரும் போது குண்டாக இருந்தவர் நிகழ்ச்சி முடிந்து போகும் போது உடல் எடை குறைந்து இளம் நடிகை போல் மாறி விட்டார்.’

அதன் பிறகு அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்தாலும் படவாய்ப்புகளும் அவரைத் தேடிச் செல்லவில்லை. இதனால் ரகசியமாக நடிகர் தனுஷிடம் தனக்கு பட வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார்.

தனுஷும் தனக்கு ஆரம்பத்தில் ஜோடி போட்ட நடிகை என்ற பரிதாபத்தில் தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் சொல்லி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். ஆனால் ஷெரினோ, நடித்தால் உங்களுக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் நடக்கிற காரியமா? என சிரித்தபடியே சென்றுவிட்டாராம் தனுஷ்.

dhanush-sherin-cinemapettai

dhanush-sherin-cinemapettai

Continue Reading
To Top