Tamil Cinema News | சினிமா செய்திகள்
36 வருடத்திற்கு முன் பிரபல இயக்குனருடன் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட கவுண்டமணி.. அதுவும் இந்த வார்த்தை சொன்னதால் தான்!
நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி செந்தில் ஜோடி என்றால் மக்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் இருக்குமாம் அப்போது திரையரங்குகளுக்கு செல்லும் போது.
சமீபகாலமாக கவுண்டமணி வயது முதிர்வின் காரணமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இடையில் ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களும் சரியாக போகவில்லை.
கவுண்டமணி அவருக்கு சூப்பர் ஹிட் பட காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனருடன் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட தகவல் ஒன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்தின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி எப்போதுமே தன்னுடன் இருப்பவர்களை செல்லமாக கிண்டல் அடித்துக் கொண்டிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதை பல மேடைகளில் அவருடன் அதிக படங்களில் நடித்த சத்யராஜ் இதை தெரிவித்துள்ளார்.
அப்படி வைதேகி காத்திருந்தாள் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் இயக்குனரான ஆர் சுந்தர்ராஜன் என்பவரை நண்டு காலன் போறான் பாரு என கிண்டல் செய்துள்ளார். அப்படி கூப்பிடாதே என கவுண்டமணியிடம் எச்சரிக்கும் போது வாக்குவாதம் அதிகரித்ததாம்.
வாக்குவாதம் இறுதியில் முற்றி இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்களாம். அதிலிருந்து கவுண்டமணி மற்றும் ஆர் சுந்தரராஜன் ஆகிய இருவருமே பேசிக் கொள்வதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
