போதை பவுடருடன் கையும் களவுமாக சிக்கிய 31 வயது தமிழ் பட நடிகை.. அம்மணி ராஜபோதையாம்!

நடிகர், நடிகைகள் மது பார்ட்டிகள் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்ல. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதே சகஜமாகிவிட்ட நிலையில் பார்ட்டிகள் கொண்டாடுவது மட்டும் என்ன குறைவாகவா இருக்க போகிறது. எல்லாம் நிறைவுதான்.

மது பார்ட்டி என்றால் சரக்கு மட்டும் கிடையாது. மோசமான போதை பொருட்களை பயன்படுத்துவதும் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்களிடம் நடிகைகள் சிக்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அப்படி சமீபத்தில் இரவு நேரத்தில் ஒரு பங்களாவில் ரகசியமாக போதைப்பொருட்கள் உட்கொண்டு பார்ட்டி கொண்டாடிய முப்பத்தி ஒரு வயது நடிகையான ஹீனா பன்சால் என்பவர் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

தமிழில் 2015ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தவர் ஹீனா பன்சால். ஹிந்தி ஹீரோயினான இவர் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தென்னிந்திய சினிமாவில் தலைகாட்டி விட்டு செல்கிறார்.

heena panchal-cinemapettai
heena panchal-cinemapettai

இவரும் இவருடைய சக நண்பர்களும் சேர்ந்து சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற மாவட்டத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்த சொகுசு பங்களா ஒன்றில் நண்பர்களுடன் போதை பார்ட்டியில் ஈடுபட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவும் பயன்படுத்தப் படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்து உடனடியாக வந்து அங்கிருந்த 22 பேரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகுதான் தெரிந்ததாம் அதில் ஒரு நடிகை இருக்கிறார் என்று. இது ஒரு ரகசிய பார்ட்டி என்பதால் நடிகைகளின் வரவு ரகசியம் காக்கப்படும் என்கிறார்கள் அங்குள்ள வட்டாரங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்