தமிழக அரசியல் களம் நாள்தோறும் பல பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தனக்கு முதலவர் பதவி வழங்காவிட்டால் கலவரம் ஏற்படுத்த சசிகலா கும்பல் தமிழகம் முழுவதும் ரவுடிகளை இறக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியானதும், சென்னை கமிஷனர் ஜார்ஜ் தலைமையில், சென்னை முழுவதும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பலர் பிடிப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த சோதனையில் இதுவரை 300க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பலர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுவதால், தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.