இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்.சி. இப்போது அவர் பரபரப்பாக படங்களில் நடிப்பதில்லை. படத்தயாரிப்புக்கும் பிரேக்விட்டிருக்கிறார். அரண்மனை 2 படத்தைத் தொடர்ந்து தற்போது சங்க மித்ரா என்ற படத்தை இயக்குகிறார்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இது சுந்தர்.சிக்கு இலட்சிய படமாம். எனவே அந்தப் படத்தின் பிரீ புரடக்ஷன் பணியில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவரை நம்பி பல கோடி ரூபாயை கொட்டி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

காரணம் இது அவர்களது 100வது படம். எனவே தான், ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

தமிழ்பதிப்பில் சூர்யா நடிக்க மறுத்தவிட்டதால், தற்போது ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளில் பிரம்மாண்ட படம் என்பதால் இரண்டு வருடம் ஆகும் என்பதால், கிடைக்கும் இடைவெளியில் டிவி சீரியல் தயாரிப்பு ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் சுந்தர்.சி.நான்கு தென்னிந்திய மொழிகளில் இந்த சீரியல் உருவாகிறது. தேவ சேனா என இந்த டிவி சீரியலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறாராம்.

இந்த மெகா ஹாரர் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகிறது. ஆனால் முதலில் இந்த படத்தில் நடக்க விஜய்யிடம் பேசியுள்ளார், பிறகு சூர்யா அப்புறம் ஜெயம் ரவி .

300 கோடி பட்ஜெட் பிரமாண்ட மித்ரா படம். சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் அவுட்லுக் டிசைனை வெளியிட்டு அதிரவைத்தார் சுந்தர இயக்குனர். முன்னதாக, இந்த படத்தில் தளபதி நடிகர் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்து மறைந்தன.

சுந்தர இயக்குனர் கதை சொன்னதும் தளபதி நடிகர் ஒகே சொன்னதும் உண்மைதான். ஆனால், திரைக்கதையை கேட்ட பிறகுதான் படத்தில் நடிக்க முடியாது என மழுப்பியுள்ளார் தளபதி. என்ன காரணம் என்றால், படத்தில் கதாநாயகனை விட கதாநாயகிக்கே முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. இப்படியான படத்தில் நடித்தால் தன்னுடைய ரசிகர்களை திருப்திபடுத்த முடியாது என்பதால் தான் இந்த படத்திலிருந்து விலகியுள்ளார் தளபதி நடிகர்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த படத்தில் ஹீரோயின் தான் முக்கியமான கதாபாத்திரம் என்று சுந்தர இயக்குனரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதனாலேயே படத்திற்கு கதாநாயகியின் பெயரை வைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.ஒரு வழியாக ரசிகர்வட்டம் இல்லாத ஜெயமான நடிகரும், சைக்கிள் நடிகரும் இறுதியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.

தளபதி நடிகரின் இந்த முடிவை தெரிந்துகொண்ட பிறகு சூரிய நடிகரும், விக்கிரம நடிகரும் எஸ்கேப் ஆகியிருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here