
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யை நம்பி 30 வயது மதிக்கத்தக்க நடிகை ஒருவர் தனக்கு வரும் மற்ற படவாய்ப்புகளை தவிர்த்து வருவது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளின் சினிமா காலம் என்பது குறைவு தான். தனக்கு மவுசு இருக்கும் போதே ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து சொத்துக்கள் சேர்த்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
அதைத்தான் தற்போது வரை பல நடிகைகள் செய்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக விஜய்யின் பட வாய்ப்பு கிடைத்து விட்டதால் அந்த படத்தை மட்டுமே நம்பி தனக்கு வரும் மற்ற படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து வரும் நடிகையை பார்த்து கோலிவுட் வட்டாரம் இந்த பிள்ளைக்கு அறிவு இல்லையா என கிசுகிசு பேசுகிறார்களாம்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்தான் தளபதி 65. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் தான் பூஜா ஹெக்டே.
தமிழில் ராசியில்லாத நடிகை என ஒதுக்கப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியை விஜய் படத்தின் மூலம் கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஒப்பந்தமான பிறகு தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளில் இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் விஜய் படத்தை நல்லபடியாக நடித்து முடித்த பிறகுதான் மற்ற படங்களில் ஒப்பந்தம் ஆவேன் என கூறிவிட்டாராம். தளபதி 65 படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே தற்போது தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக ஏற்றி விட்டார் என்பது கூடுதல் தகவல். இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான் இந்த நடிகைக்கு ஆக போகிறது என எச்சரிக்கிறார்கள்.
