தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் நீளம் சுமார் 2 முதல் 2.30 மணி நேரங்கள் இருக்கும். ஆங்கிலப்படங்களின் நீளம் சுமார் 1 முதல் 1.30 மணி இருக்கும். இது ரசிகர்களையும் படம் திரையிடப்படும் இடங்களையும் பொறுத்து மாறுபடக்கூடியது.

ஆனால் ஒரு படம் 720 மணி நேரங்கள், அதாவது ஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து ஓடினால் எப்படி இருக்கும். கற்பனை செய்வதே கஷ்டமாக உள்ளதல்லவா!

இப்படி ஒரு சாதனை முயற்சியில்தான் ஆம்பியன்ஸ் என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஆண்ட்ரு வெப்பெர்க். இப்படத்தின் சுவாரஸ்யங்கள் நம்மை அசரவைகின்றன.

இதற்கு முன்பே மாடர்ன் டைம்ஸ் பார் எவர் என்ற திரைப்படம் சுமார் 240 மணி நேரம் நீளத்துடன் வெளியிடப்பட்டு முதல் சாதனை படைத்தது, அதன் சாதனையை முறியடிக்கும் விதமாக இந்த ஆம்பியன்ஸ் திரைப்படம் பல ஆண்டுகளாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆம்பியன்ஸ் படத்தின் டீசர் மட்டும் 72நிமிடங்கள் நீளம் கொண்டது. 2014ம் ஆண்டு இந்த நீளமான டீசர் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இப்போது அந்த திரைக்குழு அடுத்த டீசர் இன்னும் நீளமாக 72மணி நேரம் ஓடக்கூடியதாய் 2018ம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டு 2020ல் வெளியிடத்திட்டமிட்டுள்ளனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரு படம் ஒரு மாசம் ஓடினால் அதை பிக் பாஸ் வீட்ல இருக்குறவன் கூட பார்க்கமாட்டான்.