எந்திரனை விட 3 மடங்கு வசூல்! எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட 2.O..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்த மறுநாளே இந்த படத்தின் தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டது.

ஆம், முன்னணி தெலுங்கு விநியோகிஸ்த நிறுவனம் ஒன்று இந்த படத்தை தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் உரிமையை ரூ.81 கோடிக்கு பெற்றுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் ரூ.27 கோடிக்கு மட்டுமே விலை போயிருந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக வியாபாரம் ஆகியுள்ளது.rajini-2-0-poster

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி ஒன்று ரூ.110 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் தற்போதே இந்த படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது.rajini 2.0

இன்னும் தமிழகம், கேரளம், கர்நாடகம், வட இந்தியா மற்றும் உலக ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் மீதியுள்ள நிலையில் இந்த படத்தின் மொத்த வியாபாரம் ரூ.600 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Comments

comments