Connect with us

Cinemapettai

ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்

heart-attack

India | இந்தியா

ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்

சியோல்: ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல், பல் துலக்கினால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் 10 சதவீதத்திற்கு அதிகமாக குறையும் என்கிறது ஆய்வு.

தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள்  40 முதல் 79 வயதுக்குட்பட்ட 161,000 பேரின்  வாய்வழி சுகாதாரம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தார்கள்.

மோசமான வாய்வழி சுகாதாரம், ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிக்க வழிவகுக்கிறது, உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தை பம்ப் செய்ய அல்லது ரத்தத்தை நிரப்பும் இதயத்தின் செயல் திறன் பலவீனமடைகிறது.
இந்நிலையில் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு இதய செயலிழப்பு ஆபத்து 12 சதவீதம் குறைந்து உள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆபத்து 10 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அடிக்கடி பல் துலக்குவதால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் வாழும் பாக்டீரியாக்கள்  குறைந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்குது. இதய செயலிழப்பு,  ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் நிலை ஆகியவற்றை குறைக்கிறதாம்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top