கலாபவன் மணி கொலையா ? 3 பேர் கைது – திடுக்கிடும் தகவல்

Kalabhavan-Mani-கடந்த மார்ச்-6ஆம் தேதி மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார்.. ஏற்கனவே இவர் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மது அருந்தியதால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாகவும், அதனாலேயே மரணம் சம்பவித்ததாகவும் கூறியுள்ளனர்.. இதனை தொடர்ந்து அவரது அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் சம்பவம் நடந்த கலாபவன் மணியின் அவுட் ஹவுஸை பூட்டி சீல் வைத்தனர்..

மேலும் கலாபவன் மணி உயிருடன் இருந்தபோது அவருடன் கடைசியாக மது அருந்திய நடிகர் ஜாபர் இடுக்கியுடன் சேர்த்து மணியின் நபர்கள் ஐந்து பேர் மீது சந்தேக வலையை விரித்தனர். அதன்பின் இப்போது பூட்டப்பட்ட அவுட் ஹவுஸை ஆராய்ந்ததில் அங்கிருந்த தடயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு சுத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. கலாபவன் மணியிடம் வேலைபார்த்த அருண், விபின், முருகன் என்கிற மூவரும் தான் கலாபவன் மணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபின்  அவர் வாந்தி எடுத்ததையும் மற்ற சில பகுதிகளையும் சுத்தப்படுத்தியுள்ளனர்.. இது தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதாக கூறி அந்த மூவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.