Karthi:சமீபத்தில் வெளியான படங்களில் கார்த்திக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். அதன் பிறகு வெளியான ஜப்பான் படம் எதிர்பார்த்த அளவு போகாமல் தோல்வியுற்றது. இதைத்தொடர்ந்து வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் ஆகிய இரண்டு படங்களில் கார்த்தி நடித்துள்ளார்.
இந்நிலையில் கார்த்தியின் மார்க்கெட் படுத்தாலும் அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதன்படி சமீபத்தில் சர்தார் படத்தின் பார்ட் 2 உருவாக உள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் 15 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
அதேபோல் லோகேஷ், கார்த்தி கூட்டணியில் கைதி 2 படமும் உருவாக உள்ளது. கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமாக பார்க்கப்படும் படம்தான் கைதி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே உருவாகுவது உறுதியான நிலையில் லோகேஷ் ரஜினியின் கூலி படத்தில் பிஸி ஆகிவிட்டார்.
கைதி 2வில் லோகேஷ் போட்டுள்ள மாஸ்டர் பிளான்
இப்போது அந்த படத்தை முடித்த கையுடன் கைதி 2 படத்தை தான் இயக்க உள்ளார். அதோடு லோகேஷ் எல்சியுவில் இடம் பெற்ற அத்தனை நடிகர்களும் கைதி 2வில் நடிக்க உள்ளார்களாம். மேலும் விக்ரம் படத்தில் நடித்த கமலும் கைதி 2வில் நடிக்க உள்ளார்.
ஆனால் விஜய் இப்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் அவரது குரல் மட்டும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கார்த்தி இரண்டு பார்ட் 2 படங்கள் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
இதுதவிர விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற டாணாகாரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்க உள்ளது. ஆகையால் இந்த படங்கள் மூலம் கார்த்தி விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மார்க்கெட்டை இழந்த கார்த்தி
- 29 படங்கள் நடித்தும் மறு கூட்டணி அமைக்காத கார்த்தி
- கார்த்திக் போல் மாறும் மகேஷ்
- ரஜினிக்கு வயசானதால் சிக்கலில் மாட்டிய லோகேஷ்