fbpx
Connect with us

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆபாசப் படம்: 3 பேர் மீது விசாரணை

delhi

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆபாசப் படம்: 3 பேர் மீது விசாரணை

டெல்லியில் உள்ள ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்நிலையத்தில் ஆபாசப் படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அங்குள்ள நடைமேடைகளில் சமீபத்தில் ரயில் வருகை பற்றிய தகவல்களை பகிரும் எல்ஈடி திரை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் ரயில் வருகை நேரம் மற்றும் புறப்படும் நேரம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் சேவை தொடர்பான தகவல்கள் அவ்வப்போது பகிரப்பட்டு வந்தது.

இவற்றில் ஒரு எல்ஈடி திரையில், திடீரென ஆபாசப்படம் ஓடியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்நிலை விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசாருக்கு அங்குள்ள சிசிடிவி புகைப்பட வீடியோ கிடைத்துள்ளது. இதில், கடந்த 9ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த ஆபாச வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்வத்தில் 3 பேர் ஈட்பட்டுள்ளதாக சிசிடிவி புகைப்பட காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சியில் 3 பேர் கொண்ட கும்பல் மொபைல் மூலமாக டிவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி அதனை ஒளிபரப்பச் செய்துள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top