50+ ரன்களையும் 5 விக்கெட்டுகள்.. ஒரே போட்டியில் எடுத்த 3 இந்திய ஆல் ரவுண்டர்கள்!

ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்களால் மட்டும் தான் ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் எடுக்க முடியும். அணியில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் என இருவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு ஆல்ரவுண்டர்ரை தேர்ந்தெடுத்தால் அணியை மேலும் வலுப்படுத்தலாம்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான ஆல்ரவுண்டர்கள் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்தார். தற்போதைய இந்திய அணியில் ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இவர்கள் தங்களது ஆல்ரவுண்டர் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அப்படி இந்திய அணிக்காக விளையாடி சாதித்த 3 இந்திய ஆல்ரவுண்டர்களை தான் நாம் பார்க்க போகிறோம்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: இந்திய அணிக்காக 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4092 ரன்களை குவித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டர். ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளையும் 50 ரன்களையும் கடந்த முதல் இந்திய வீரர் இவர்தான். 1988ல்நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரீகாந்த் 7 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் 87 பந்துகளை சந்தித்து 70 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்தார்.

Srikanth-Cinemapettai.jpg
Srikanth-Cinemapettai.jpg

சௌரவ் கங்குலி: இந்திய அணி கண்ட கேப்டன்களில் மிக ஆக்ரோஷமான கேப்டன் சவுரவ் கங்குலி.
இந்திய அணியை கட்டமைத்தவர் இவர். கங்குலி தலைமையில் 2003ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. 2000ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சவுரவ் கங்குலி 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 34 ரன்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் 68 பந்துகளை சந்தித்து 71 ரன்களை குவித்தார். இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sourav-Ganguly-Cinemapettai.jpg
Sourav-Ganguly-Cinemapettai.jpg

யுவராஜ் சிங்: 2011 உலகக் கோப்பையை இந்திய இந்திய அணி வென்றதற்கு பெரும் பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர் 8071 ரன்களை குவித்துள்ளார். 2011 உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 31ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்திருந்தார். அந்த போட்டியில் 20 ஓவர் முடிவில் 100 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் 75 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Yuvraj-Cinemapettai-2.jpg
Yuvraj-Cinemapettai-2.jpg
- Advertisement -spot_img

Trending News