Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் 3 மணி நேரத்திற்கு கொட்டிதீர்க்கபோகும் மழை.! இதோ வானிலை அறிவிப்பு.!
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் மழை பெய்து வருகிறது ,அது மட்டுமில்லாமல் சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இன்று காலை சற்று மழை குறைவாக இருந்தது ஆனால் மீண்டும் மழை தற்பொழுது வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று மாலை1.30மணியில் இருந்து 4.30 மணி வரை பல மாவட்டங்களில் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
thunderstorm is likely to occur in some areas for next three hours pic.twitter.com/WbiDQweC6a
— TN SDMA (@tnsdma) October 4, 2018
